பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 34


பெயர் கொண்ட மற்றோர் இடமும் இருக்கிறது. இலங்கைக்குத் தெற்கே மதுரா என்பதொன்றுள்ளது. ‘கிழக்கு ஆர்ச்சிபெலாகோ’வில் ‘மதுரா’ என்று வழங்கப்படும் சிறிய தீவு உள்ளது. இத்தீவு இந்தியாவிலிருந்து சென்ற பிராமணி குடியேற்ற மக்களால் இப்பெயர் பெற்றது.

தென்னிந்தியாவிற்குக் கிரேக்க உறவு ஏற்பட்ட காலம்

ரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றிய காலத்தில் கிரேக்க வணிகர் இந்தியாவிற்கு வந்தனர் என்று தாலமியும் மற்றவர்களும் கிரேக்க வணிகர்களிடமிருந்து பெற்ற செய்திகளினின்று அறியக் கிடக்கின்றது. இந்தியாவில் காணப்படும் பழைய ரோம நாணயங்கள் அகஸ்தஸ் அரசன் காலத்தவை. மலையாளக் கடற்கரையில் ரோமப் பேரரசின் பொற்காசுகள் மிக அதிகமாகச் சில ஆண்டுகட்குமுன் கிடைத்தன. அவற்றில் அகஸ்தஸ் காலப் பழைய நாணயங்களும் நீரோவுடைய காசுகள் சிலவும் சேர்ந்த முப்பது வகைப்பட்ட நாணயங்களின் விவரங்களை ஒரு கட்டுரையில் நான் எழுதியுள்ளேன். (இவ்வாறு கால்டுவெல் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடல் பயன்தரும். - ந.ச.) 1851 இல் இக்காசுகளுக்கு உரிமையாளராகிய திருவாங்கூர் பேரரசரால் திருவாங்கூரில் இக்கட்டுரை பதிப்பிக்கப்பட்டது. அரிசியின் கிரேக்கச் சொல்லாகிய ‘ஒரிஸா’ முதன்முதல் அரிசி ஐரோப்பாவில் பழக்கத்திற்கு வந்தபோது ஏற்பட்டது. தவிடு நீங்கிய நெல்லுக்கு இங்கே அரிசி என்ற பெயரும் உள்ளது என்பதை ஐயப்படலாகாது. இக்காலம் போலவே முன்பும் அரிசி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஐரோப்பாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த துறைமுகங்களில் எல்லாம் மிகச் சிறந்த - கிரேக்கர்களுக்குப் பழக்கப்பட்ட - துறைமுகம் தாமிரபரணியின் கழிமுகப் பகுதியிலுள்ள கொற்கை (கொல்கை) துறைமுகமாகும். கிரேக்கர்களுக்கு முன் இந்தியாவின் வியாபாரம் பெனிஷியர்களிடமும் பெர்ஷியர்களிடமும் இருந்தது. உலகத்திலும் பழைய எழுத்து வடிவானக் குறிப்புகளிலுள்ள மிகப் பழைமையான தமிழ்ச் சொல் மயிலின் பெயராகும். இது ஹீப்ரு அரசு பாடபுத்தகங்களிலும் வரலாறுகளிலும் (சுமார் கி.மு. 1000 இல்) ஓபிரிலிருந்து பெனிஷியர்கள் தங்கள் பெரிய வியாபாரக் கப்பற் கூட்டத்தின் ஒரு பகுதியாகிய சாலமோனுடைய கப்பல்களில் கொண்டுவரப்பட்டது என்றுள்ளது. வியாபாரப் பொருள்களின் பட்டியலிலும் காணப்படுகிறது. ஹீப்ருவிலுள்ள ‘தூக்’ என்ற சொல், தமிழ்த் ‘தோகை’ என்ற சொல்லிலிருந்து வந்தது. கிரேக்க மொழியிலுள்ள மிகப் பழைமையான தமிழ்ச் சொல் கருவப்பட்டையின்