பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 420


மக்களின் வசதிக்காக அமைந்த மிக முக்கியமான பயிர்த்தொழில் முறைகள், சாலைகள், பாலங்கள், சத்திரங்கள் ஆகியவற்றைக் கவனமு டன் உன்னிப்பாகப் பார்வையிட்டார். இதுவே இவர் பயணக் குறிக் கோளாக இருந்தது. மிக நலமுடன் இராமேஸ்வரத்தை அடைந்த மகாராசா அங்கே பூஜைகளும் சடங்ககளும் நிகழ்த்திய பின்னர் திரும்பி வந்தார். அவ்வாறு திருவனந்தபுரத்திற்குத் திரும்பிவரும் போதும் அனைத்து இடங்களையும் ஆர்வமுடன் பார்வையிட்டார். அப்பொழுது அவர் பொழுதை வீணாக்கவில்லை. இந்தப் பயணத்தின் மூலம் தென் மாவட்டங்களையும், நாஞ்சில் நாட்டின் சிறப்பினையும் நன்கு அறிந்து கொண்டார்.

மேஜர் பானர்மேன்

திருவாங்கூருக்கு 1783-1789இல் ஏற்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் முதல் பிரதிநிதி.

திப்புவின் புத்தாய்வுத் திட்டம்

தமது செயலறிவாலும், உண்மைத்தன்மையாலும் ஆங்கிலேயரது துணையாலும் மகாராசா சுல்தானிடமிருந்து தூது வராததால் மனத்துணிவு கொண்டார். பிரிட்டிஷ் அதிகாரிமட்டுமே வந்திருந்தார். சென்னை கவர்னரான திரு. ஆர்ச்சிபால்ட் காம்பெலுக்குக் கடிதம் எழுதினார் மகாராசா. அக்கடிதத்தில் தமது அவைக்கு ஒரு அதிகாரி இருந்தால் சுல்தானுடன் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். கவர்னரும் மகா ராசாவின் முன்னறிவைப் பாராட்டினார். அத்துடன் மேஜர் பானர்மேனை அவரது தங்குமிடமான பாளையங்கோட்டையினின்றும் திருவனந்தபுரம் அரசவைக்குச் சென்று வருமாறு கட்டளையிட்டார்.

திருவாங்கூரில் அமைந்த முதல் பிரிட்டிஷ் குடியிருப்பு

ஒப்பந்தப்படி காப்டன் ராக்ஸ் திருவாங்கூரின் வடக்கெல்லைக்கருகில் உள்ள ஆய்க்கோட்டையில் கி.பி.1788இல் இரண்டு அதிகாரிகள் தங்குமாறு நியமித்தார். அந்த வேளையில் மகாராசாவிற்கும் சென்னை அரசுக்கும் தொடர்பு அதிகாரியாக ஜார்ஜ் பெளனி கிழக்கிந்தியக் கம்பெனியாரால் திருவாங்கூரில் நியமிக்கப்பட்டார். இவரே மன்னர் அவையில் அமைந்த முதல் அரசு அதிகாரியாகவும் பிரிட்டிஷ் பிரதிநி தியாகவும் கருதப்பட்டார். பெளனி, 1794இல் திருநெல்வேலியில் கலக்டராகப் பணியாற்றினார். மெக்காலே 1800இல் திருவாங்கூரில் தங்கியிருந்தார்.