பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

421 கால்டுவெல்


1805இல் புதிய உடன்படிக்கை கையெழுத்திடப்படல்

1805இல் ஜார்ஜ் மேக்டெனால் அவர்களால் திருநெல்வேலியில் இருந்து மகாராசாவை புதிய உடன்படிக்கையில் கையெழுத்து இடும்படி வற்புறுத்தல் வந்தது. மகாராசாவும் சிந்தித்துக் கையெழுத்திட்டார்.

திருவாங்கூரில் புரட்சி (1809 இல் திருவாங்கூரையும் தங்கும் இடமாக இணைத்துக் கொள்ளல்)

திருவாங்கூரில் கிளர்ச்சி தோன்றிய பிறகு 1808 இல் போர் தொடங்கியது. அங்குள்ள செயலாட்சி குழுவானது பிரிட்டிஷார், தம் நாட்டில் குடியேறுவதை விரும்பவில்லை. திவான் ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டார். அவர் கொச்சி திவானையும் பிரெஞ்சுக்காரர் களையும் உதவிக்கு நாடினார். ஒரு கப்பல் நிறைய பன்னிரெண்டாவது படைப் பிரிவைச் சேர்ந்த முப்பத்தொன்று போர்வீரர்களை ஆலப் புழையில் வைத்தனர். அவர்கள் கரையிலேயே பிடிக்கப்பட்டு, இரண் டிரண்டு பேராகக் கட்டப்பட்டனர். அவர்களின் கழுத்தைச் சுற்றி கட்டப் பட்டிருந்த கற்கள் நீருக்குள் பிடுங்கி எறியப்பட்டன. கொச்சியில் உள்ள குடியிருப்பு தாக்கப்பட்டது. சென்னை கவர்னரான பார்லோ தேவையான நடவடிக்கைகள் எடுத்து கலகக்காரர்களை அடக்கி ஆங்கில அரசுக்கு உரியவற்றை மீட்டுக் கொடுத்தார். அமைதி காக்கப் படை அனுப்பி வைக்கப்பட்டது. திருவிதாங்கூறிலுள்ள சக்திகள் படைகளின் நுழை வினைத் தடுக்க இணைந்து நின்றன. கலகக்காரர்கள் மன்னரால் கை விடப்பட்டனர். தமது மந்திரிகளால் இத்தவறு நடந்ததென மன்னர் கற் பித்துக் கூறினார். ஆனால் மாநில சக்திகள் ஆங்கிலேயரை முழுமையாக எதிர்த்து நின்றன.

நான் சங்கோனிமேனனிடம் அறிந்த திருவாங்கூர் வரலாற்றினை எழுதுகிறேன்.

எழுச்சியின் காரணங்கள்

பாப்பத்து மேனன் ஒரு தனித் துதுவரைக் கொல்லத்துக்கு இரகசியக் கடிதத்துடன் அனுப்பிவைத்தார். அக்கடிதம் வேலுத்தம்பிக்கும், படைத் தலைவனுக்கும் எழுதப்பட்டிருந்தது. அதில் பிரிட்டிஷாரைப் படுகொலை செய்யுமாறும், அதற்கு உதவ கொச்சியிலுள்ள கோட்டைப் பாதுகாப்புப்படை முன்னிற்கும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

வேலுத்தம்பி, மேனன் ஆகிய இருவரும் செய்த திட்டத்தைக் கண்டு அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பழிவாங்கும் ஆசையுடன் அத்திட்டத்திற்கு ஒத்துக் கொண்டு நேரம் குறிக்கப்பட்டது.