பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

425 கால்டுவெல்


திருவாங்கூர் மக்களுக்கு சென்னை அரசால் அனுப்பப்பட்ட அறிக்கை.

அரசு கீழ்க்கண்ட அறிக்கையை 1809 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி திருவாங்கூர் மக்களுக்காக வெளியிட்டது.

அறிக்கை:திருவாங்கூர்மக்களுக்குத் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், பல ஆண்டு காலமாக பிரிட்டிஷ் அரசுக்கும் திருவி தாங்கூர் அரசுக்கும் நல்லுறவு உள்ளது. பிரிட்டிஷ் படைகள் திருவாங் கூரைக் காப்பதில் ஈடுபட்டுள்ளது. இப்படையால் திப்பு சுல்தானிட மிருந்து திருவாங்கூர் காப்பாற்றப்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலைகளில் கலக நிகழ்ச்சிகள் ஏற்படுவது கவர்னருக்கு வியப்பைத் தருகிறது. திருவாங்கூர் படைகளால் பிரிட்டிஷ் அதிகாரி தாக் கப்பட்டுள்ளார். கொல்லத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இது போன்ற நிகழ்ச்சிகள் திருவாங்கூர் திவானால் உருவாக்கப்படுகிறது என்று கவர்னர் நம்புகிறார். எனவே திவானின் சக்திகள் விரைவில் கவர்னர் அனுப்பும் படையால் ஒடுக்கப்படும். அதனால் நாட்டில் நிம் மதியும் நலமும் நிலைக்கும். அதே நேரத்தில் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தேவையான நேரங்களில் தயக்கமின்றி பிரிட்டிஷ் படையின் உதவியை நாடலாம். பிரிட்டிஷ் அரசுக்குத் திருவாங்கூர் மன்னரைத் திவானிடம் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு இல்லை. எனவே, ஆபத்துக்குரிய சக்திகள் விரைவில் அழிக்கப்பட்டு இரு அரசுகளுக்கும் இடையே நல்லெண்ணமும் நலமும் உருவாக்கப்படும்.

கவர்னர் நாட்டுமக்களை ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறார். பிரிட்டிஷ் படையால் மக்கள் சொத்துக்களும் காக்கப்படும். நாட்டில் பிராமணர்களுக்கும், மத நடவடிக்கைகளுக்கும் இடையூறு எற்படாதவண்ணம் கண்காணிக்கப்படும்.

ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டை,

17 ஜனவரி 1809,

மதிப்பிற்குரிய கவர்னரால் வெளியிடப்பட்டது.

(ஒப்பம்) ...

அரசு தலைமைச் செயலர். (பக்கம் 346)

திருவிதாங்கூர் அதிகாரிகளும், படைகளும் அரசு ஆணைக்காகக் காத்திராமல் கர்னல் தூய லீகர் தலைமையில், திருவிதாங்கூரின் தென்