பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 426


எல்லையான ஆராம்பொழியைத் தாக்கினர். ஆராம்பொழிக்கோட்டை 1809 ஆம் ஆண்டு பெப்ரவரி 10இல் தாக்கப்பட்டது. வேலுத்தம்பி தளவாய் ஆராம்பொழியினின்றும் தப்பித்து திருவனந்தபுரத்திற்கு ஓடிப் போனார். (பக்கம் 347)

திருவிதாங்கூர் எல்லை எடுக்கப்படல்

ஜெனரல் வெல்ஸ் துரையால் திருவிதாங்கூர் எல்லை எடுக்கப்பட்ட போது நடந்த போரையே முக்கியமான போராகக் கருதுகிறோம். ஆங்கில அரசினை வற்புறுத்துவதற்காக மக்கள் கூடினர். கர்னல் செயின்ட் லீகரின் ஆணையால் மேஜர் வெல்ஸ் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ஆராம்பொழியினின்றும் 6 மைல் தொலைவில் கூடாரம் அமைத்தார். திருநெல்வேலி எல்லையில் இந்த ஆராம்பொழி அமைந்துள்ளது. திருவாங்கூரின் நுழைவாயிலாகவும் இக்கணவாய் விளங்குகின்றது.

எல்லை வருணனை

உறுதிவாய்ந்த மலைகள் எல்லையாக கோட்டையைப் போல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சில இடங்களில் சிறிய சுவர்களும் புதர்களும் மதில்களாக விளங்குகின்றன.

வெற்றிகரமான தாக்குதல்

மேஜர் வெல்ஸ் மதில்களை ஏணி மூலமாகக் கடந்து சென்று தாக்க வேண்டுமென்று திட்டமிட்டார். பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி இத்தாக்குதல் நடைபெற்றது. தென்புறக் கோட்டை மதில்களை இரவி லேயே கடந்தனர். என்றாலும் 50 பீரங்கிகளின் மூலம் எதிர்த்துப் போரா டிய பிறகுதான் 10 ஆயிரம் வீரர்களும் உள்ளே புக முடிந்தது. மதிலின் அடிப்பாகத்தை அடைய 6 மணி நேரம் ஆகும் அளவிற்குப் போர் கடுமையாக இருந்தது. வடக்கெல்லையில் திருவாங்கூர் வீரர்கள் தப்பி ஓடினர். மாலைக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் ஆராம்பொழிக் கோட்டைக்குள் 2 மைல் தொலைவில் கூடாரம் அமைத்தனர்.

திருவனந்தபுரத்தை நோக்கி முன்னேறுதல்

17 ஆம் தேதி படை திருவாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றது. அன்று காலை வேளச்சேரியில் சுசீந்திரம் ஆற்றுக்கு எதிர்கரையில் திருவாங்கூர் படையால் எதிர்க்கப்பட்டனர். அவர்களை அழித்துவிட்டு கோட்டாறு நாகர்கோவில் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இதுவே இரத்தம் சிந்தி நடத்திய இறுதிப் போராகும். ஆங்கிலேயர் பின்னர் ஓடக்கரை, பத்ம நாபபுரம் போன்ற கோட்டை