பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

427 கால்டுவெல்

 களைப் பிடித்தனர். இவர்களின் வரவையறிந்த மகாராசா 140 பீரங்கி களையும் 14,000 வீரர்களையும் கொண்டு ஆங்கிலேயர்க்கு அடி பணிந்தார். ஆங்கில வீரர்களைக் கண்டதும் திவான் தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரர்களும் கூட்டாளிகளும் கொல்லத்தில் 12வது படைப் பிரிவுக்கு முன் தூக்கிலிடப்பட்டனர். கர்னல் மெக்காலே திரும்பிவந்து புதிய திவானை அமைத்து நாட்டில் அமைதியை உருவாக்கினார்.

திருவாங்கூரில் நடந்த நிகழ்ச்சிகள்

கொல்லத்திலுள்ள உதவிப்படைகளுககுத திடடங்கள ஏதுமில்லை. கோட்டைக் கதவை அடைத்ததால் உள்நாட்டுக் குழப்பம் உருவானது. இதனால் ஆங்கிலேயர் எளிதில் வென்றனர். அவர்களின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே போனது. ஆராம்பொழிக் கோட்டை பிடிபட்டதும் தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். ஜெனரல் வெல்ஸ், எல்லை மிகப் பாதுகாப்பானது என்றும் திப்பு அதனைக் கைப்பற்ற முடியாது என்றும் கருதினார். அதனால் வடக்கெல்லையைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

கீழ்க்கண்ட குறிப்புகள் சங்கநேரி மேனனின் வரலாற்றில் உள்ளது

கர்னல் பின்னர் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று, பாப்பன் கோட்டில் கூடாரம் அமைத்தார். மகாராசா உன்மணித்தம்பியின் தலைமையில் ஒரு துதுக்குழுவை அனுப்பி வைத்தார். அத்துடன் மார்த்தாண்டன் ஏர்வையும் சென்றார். வேலுத்தம்பியால் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்ச்சிகளுக்கு வருத்தம் தெரிவித்து இழப்புகளுக்கு ஈடுசெய்ய விரும்பினர். கர்னல் மெக்காலே மார்ச் 3 ஆம் தேதி வந்தார். போர் இழப்புகளுக்காக 50,000 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர் திருவாங்கூர் குழுவினர்.

உன் மணிதம்பி 1809 ஆம் ஆண்டு மார்ச் 18இல் திவானாக்கப்பட்டார். தளவாயைச் சிறை பிடிக்குமாறு ஆட்களை அனுப்பினார். தளவாய் தலைமறைவாகக் குன்னத்துர் மாவட்டத்திலுள்ள வள்ளிக் கோட்டை காடுகளில் அலைந்தார். அதிகாரிகள் அங்கு தேடத் தொடங்கியதும் அங்கிருந்து 'மன்முடி'க்கு வந்தார். இவரது வேலையாளைத் தெருவில் கண்ட அதிகாரிகள் வேலுத்தம்பியின் மறைவிடத்தை அறிந்தனர்.வேலுத்தம்பி அங்கிருந்து பகவதி கோயிலுக்கு ஓடி ஒளிந்தார். அவருடன் அவர் தம்பி பத்மனாபத்தம்பியும் சென்றார். தன் தம்பியிடம் தன்னைக் கொல்லுமாறு வேண்ட, அவரது தம்பி ஒரே வீச்சில் தலையை வெட்டும்போது அதிகாரிகள் கதவை உடைத்துக் கொண்டு அங்கே