பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 428


வந்தனர். கைது செய்தனர். வேலுத் தம்பியை இழிவுபடுத்த அவரது பிணத்தைத் தொங்கவிட்டனர். லார்டு மிண்டே இச்செயலை மிகவும் கண்டித்தார்.

தளவாயின் தம்பி ஏப்ரல் 10ம் தேதி கொல்லத்தில் 12வது படைப் பிரிவின் முன் தூக்கிலிடப்பட்டார். சர்ஜன் படுகொலையில் தொடர்பு உடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட உன்மணித்தம்பியின் உறவினர் அச்சுறுத்தப்பட்டனர். அவரது வீடு தரைமட்டமாக்கப்பட்டு மரங்கள் சாய்க்கப்பட்டன. பிறர் தூத்துக்குடிவரை ஓடிச் சென்று பிழைத்தனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் சிறையிலடைக்கப் பட்டனர். பாரசாலை, ஆலப்புழை ஆகிய இடங்களில் ஐரோப்பியர் களைக் கொன்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த இடங்களில் தூக்கிலிடப்பட்டனர்.

அரசியல் விளைவுகள்

'ஆட்சிசன் நடவடிக்கைகள்' என்ற நூலில் அரசியல் பொருளாதார விளைவுகள் விளக்கியுரைக்கப்பட்டுள்ளன. இராசா, பிரிட்டிஷ் அரசுக் குரிய செலவினைச் செலுத்தி வந்தார். கொல்லத்தில் பிரிட்டிஷ் படைப் பிரிவு நிறுத்தப்பட்டது. உள்நாட்டு அரசியல் விவகாரங்களிலும் ஆங்கி லேயர் தலையிட்டு வந்தனர். 1811இல் ராசா மாண்டதும் லட்சுமிராணி பட்டத்திற்கு வந்தார். இது இங்குள்ள அரசமரபாகும். இவர் 1814 வரை ஆளும் போது கர்னல் மன்றோ அதிகாரியாக விளங்கினார். ராணியின் மூத்த மகன் ஆண்ட போது பிரிட்டிஷாரின் அதிகாரமும் நடைபெற்று வந்தது.

செங்கோட்டை

செங்கோட்டையைப் பற்றிய குறிப்புகளையும் இத்துடன் இணைத்துள்ளேன். பிரிட்டிஷ் அரசுக்குக் கர்நாடக நவாபால் 1801 இல் திருநெல்வேலி விட்டுக் கொடுக்கப்பட்ட போது திருவாங்கூரின் ஒரு பகுதியான செங்கோட்டை மாவட்டத்தையும் தன் ஜமீனுக்குள் உரிமை கொண்டாடினார். திருவாங்கூர் இராசாவும் இதனை ஒப்புக் கொண்டு திறை செலுத்தினார்.

திருவாங்கூர் மன்னர் செங்கோட்டையை நவாப்பின் ஜமீனுக்குள் தொடர்ந்து விட்டுவைக்க விரும்பவில்லை. மாதவராவின் கூற்று கீழே தரப்பட்டுள்ளது. கர்நாடக நவாபின் தளபதியான முகமது யூசுப்பின் வெறுப்புக்கு ஆளாகி ஆங்கிலேயர் துணையால் துக்கிலிடப்பட்டார். திருவாங்கூர் யூசுப்கானுக்கு நட்பாக இருந்ததால் நவாப் பழிவாங்குவதற் காகச் செங்கோட்டையையும் களக்காட்டையும் கர்நாடகத்துடன்