பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

431 கால்டுவெல்


மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாவட்டந்தோறும் கொள்ளை நோயின் நிலை ஆராயப்பட்டது. பவானியில் இக்குழு 1811 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி கூடி நோய் தடுக்கவும், நோயினின்றும் பாதுகாப்புப் பெறவும் வழிமுறைகளை ஆராய்ந்தது. மக்கள் மிகவும் ஏழைகளாக மருத்துவக் குழுவின் சிபாரிசுகளை ஏற்றுச் செயல்படுத்த முடியா நிலையில் இருந்தனர். நிலை மட்டத்தினின்றும் உயரமாக வீடுகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், கம்பளியால் போர்த்துக் கொண்டு கட்டில்களில் தூங்க வேண்டும் என்றும், சூடு தரும் ஆடைகளையும் செருப்புகளையும் அணிய வேண்டும் என்றும் அதிகாலையில் வெளியே செல்லக் கூடாதென்றும் நல்ல உணவை உண்ண வேண்டும் என்றும் மருத்துவக் குழு கூறியது.

திண்டுக்கல்லில் 9 மாதத்திற்குள் 34,000 பேர் கொள்ளை நோயால் மாண்டனர். சில இடங்களில் 13% மக்களும் சில இடங்களில் 50% மக்களும் மாண்டனர். மதுரையில் 1811, 1812 ஆகிய இரு ஆண்டுகளிலும் கொள்ளை நோய் வெகுவாகப் பாதித்தது. இராமநாதபுரத்தில் 1812 டிசம்பர் முதல் 1813 பிப்ரவரி வரை ஆறில் ஒரு பங்கு மக்கள் கொள்ளை நோயால் மாண்டனர்.

1811 இல் வருவாய்த்துறைக்குக் கலெக்டர் ஹீப்ரு எழுதிய கடிதங்கள்

இக்கடிதங்களின் பொருளான கொள்ளைநோய், பிப்ரவரி மாதத்தில் முக்கியத்துவம் பெற்று அனைவரது கவனங்களையும் கவர்ந்தது. இந்நோய் முதலில் ஸ்ரீவில்லிப்புத்துர் மாவட்டத்தில் தோன்றியது.பிறகு தென்புறமாகப் பரவி கடற்கரை ஓரமாகப் பரவியது; பஞ்சமால், களக்காடு ஆகிய தாலுக்காக்களில் பேரழிவு செய்தது. ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள நோயின் தன்மையை அறிய ஒரு குழு நிறுவப்பட்டது.

மருத்துவக் குழு இதுபற்றிப் புலனாய்வு செய்தது. விஞ்ஞானத்தின் உதவியால் திருப்திகரமான சுகாதார நடவடிக்கைகளை எடுத்தனர். ஒரு குறிப்பிட்ட கால நிலையே இந்நோய்க்குக் காரணம் என்று கண்டனர். இக்குழு டிசம்பர் இறுதிக்குள் வீடுகள் அழிவுற்ற நிலையையும் கணக் கெடுத்தது. இவ்வழிவு மிகப் பெரியது. மழைக்குப் பின்னர் காலநிலை மோசமாக இருந்தது. பனி, இரவின் முற்பொழுதிலும் விடியலிலும் கடுமையாக இருந்தது. இரவில் வெளிவரும் வெப்பம் வீட்டுக்கு வெளியே உறங்கும் மக்களுக்குக் காய்ச்சலைத் தந்தது. மழையால் மக்கள் வீடுகளை இழந்து உறைவிடமின்றித்துன்பப்பட்டனர். இம்மழை