பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 434


பாதிக்கவில்லை.

ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்நோய் கடற்கரைப் பகுதியில் தோன்றியது. இதைச் சரியாகக் கணித்து சொல்வதும் கடினம். டிசம்பர் மாதம் இந்நோய் தொடங்கியது. நோய்களினின்றும் பாதுகாக்கும் அளவிற்கு அவ்வீடுகள் அவ்வளவு நன்றாக இல்லை. கள் இறக்குவோரின் குடிசைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உப்பளங்கள் பல பொங்கி வடிந்து நாசமாயின. குமரி முனை வரை கடற்கரைப் பகுதிகள் பேரழிவுக்குள்ளாயின. களக்காட்டில் மலைப்பகுதிகளில் காய்ச்சல் கடுமையாக இருந்தது; தாசில்தார், தமது பணியாட்களும் நோயால் மாண்டதாகக் குறிப்பிடுகின்றார். பஞ்சமகால் தாலுகாவிலும் அதிக பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்நோய் திருவாங்கூரினின்றும் இங்கு வந்து இங்குள்ள கால நிலையால் அதிக அளவில் பரவிப் பேரழிவினைச் செய்துவிட்டது.

சங்கரன் கோயில் தாலுகாவில் மக்கள் நோயால் பெரிதும் பாதிக் கப்பட்டனர். ஏப்ரல் முடிவு வரை இங்கு நோயின் தாக்கமும் இறப்பின் விகிதமும் குறைவாகவே இருந்தது. இம்மாதம் 22 ஆம் தேதி நோயின் பாதிப்பு அதிகமானதால் மிகுதியான மக்கள் மாண்டனர்.

மேற்கண்ட குறிப்புகள் நோயின் தன்மை இம்மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் எவ்வாறு அமைந்தது என்பதற்குச் சான்றுகளாகும். இவை பொதுத்துறை அதிகாரிகளால் திரட்டப்பட்ட குறிப்புகளாகும். இவை ஏறக்குறைய முறையாகத் திரட்டப்பட்ட உண்மைகளாக இருக்கும். இப்பேரழிவுக்குட்பட்டவர்களைப் பற்றிக் கணக்கெடுக்கப் பெருமுயற்சிகள் செய்யப்பட்டன. இந்நாட்டு மக்களின் இயல்புப்படி பொதுமக்கள் சரியான புள்ளிவிவரங்களைப் பெறும்படி ஒத்துழைக்கவில்லை. நோய் தணியும் வரை பல மக்களை ஊரைவிட்டே ஒதுங்கியிருக்கும்படி செய்தது. மருத்துவக் குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது.