பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

439 கால்டுவெல்



பிற்சேர்க்கை - IV

திருநெல்வேலியில் முதுமக்கள் தாழிகள்

எனக்குச் சான்று காட்ட ஏதுவாக அமைந்த முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்ற பரப்பெல்லையைக் கண்டு கொள்ள மிக ஆர்வமாக இருந்தேன். நான் எடுத்துக் கொண்ட தாழிகள் எல்லாம் மிகப் பெரிய அளவில் மண்ணால் செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் மனித எலும்புகள் சிதைந்து போன நிலையில் இருந்தன. இறந்தவர்களின் வயதுக்கேற்ப அவர்களின் எலும்புகள் வைப்பதற்கேற்ற முறையில் தாழிகள் பல்வேறு அளவில் அமைந்திருந்தன. இவற்றுள் 11 அடி சுற்றெல்லையுடைய பெரிய தாழிகளும் 4 அல்லது 5 அடி சுற்றெல்லையுடைய சிறிய தாழிகளும் கிடைத்துள்ளன. ஒவ்வொரு தாழியும் வெவ்வேறான அமைப்புடன் விளங்குகின்றன. நான் ஒரே அமைப்பில் உள்ள தாழிகளைக் கண்டதில்லை. பெரிய தாழிகள் மூலம் பயிர்த் தொழிலுக்கான நீரைக் கிணற்றிலிருந்து எடுத்தனர். இத்தாழிகளில் கைப்பிடி, மூடி, கால் போன்ற எந்த உறுப்புகளும் இல்லை. இவை நடுவில் அகன்று தலையில் குவிந்துள்ளன. இவை தொழில் முறையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இவை மண்ணால் நன்றாக வளையப்பட்டுச் சுடப்பட்டுள்ளன. ஒரு மனித உடலை வைக்கும் அளவிற்குப் பெரிய அமைப்பினதாக இவை விளங்கினாலும் கூட இவற்றின் வாய்ப்பாகம் உடலை நுழைக்க முடியாத அளவில் குறுகியதாக உள்ளது. எனவே, பிணத்தின் சதைப் பகுதியை நீக்கிவிட்டு வெறும் எலும்புகளை மட்டுமே தாழியுள் வைத்ததாகச் சிலர் கருதுகின்றனர். பொதுவாக, பிணங்கள் உள்ளே வைக்கப்படும் முறையின் படியே சிதைவு நடை பெறுகிறது என்னும் கருத்தை தீர்மானிக்கவோ மறுக்கவோ இயலவில்லை. பெரிய எலும்புகள் மட்டுமே தாழிகளில் காணப்படுகின்றன.

ஒருமுறை ஒரு தாழியில் உள்ள எலும்பு எனக்கு வியப்பூட்டியது. அது 11 அடி சுற்றளவுள்ளதாழியாகும். எனவே பிணமானது அதில் முழுமையாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமுள்ளது.இத்தாழி கொற்கையில் தோண்டியெடுக்கப்பட்டதால் இப்பகுதியில் இவ்