பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் - 2

பாண்டியர் ஆட்சியின் ஆரம்ப முதல்

விசயநகர ஆட்சியின் வானுயர் காலம் வரை

பாண்டி நாட்டின் எல்லைகள்

சேர சோழ பாண்டிய நாடுகளாகிய மூன்று தமிழ்நாடுகளின் எல்லைகள், பரப்புகள் முதலியவைகளைப் பற்றிச் சில புவியியல் செய்யுள்கள் வழக்குமுறையிலுள்ளன. இச்செய்யுள்கள் அதிகாரபூர்வமானவையென்றும் இலக்கிய உயர்வுடையவை என்றும் தமிழ்மக்கள் மதிக்கின்றார்கள். பாண்டி நாட்டைப்பற்றிக் கூறும் செய்யுளின்படி, பாண்டி நாட்டின் வடக்கே வெள்ளாறும் தெற்கே கன்னியாகுமரியும் கிழக்கே மன்னார்குடாக்கடல் பால்கன் நீரிணைப்பு (ஜலசந்தி) அல்லது தொண்டி வளைகுடாக் கடலும், மேற்கே உயர்ந்த பெரு வழியும் எல்லைகளாயமைந்திருந்தன. இவற்றுள் கிழக்கு எல்லையாகிய கடலைப்பற்றிச் சிறப்பாகக் கூற ஒன்றுமில்லை. பாண்டிநாடு பற்றிய செய்யுளில் பாண்டி நாட்டின் வடவெல்லை வெள்ளாறு என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. சோழநாடு பற்றிய செய்யுளிலும் சோழநாட்டின் தென்னெல்லை வெள்ளாறு என்பது குறிப்பிடப்படுகிறது. போட்டியும் சச்சரவும் நிரம்பிய இருபிரிவினராகிய சோழ பாண்டியரிடையே இருந்த இப்பொது எல்லை அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் முழுப் பாண்டி நாடும் சோழநாட்டுடன் இணைந்திருந்தது என்பது நாம் அறிந்ததேயாகும். தொடர்ந்த போரினால் அலுப்படைந்த சோழ பாண்டியர் தமக்குள் ஒரு நன்னாளில் ஒரு திருமணம் வாயிலாகச் சமாதானம் (அமைதி) செய்து கொண்டனர். அப்போது இருசாராருடைய பேராளர்களும் (பிரதிநிதிகளும்) கூடி வெள்ளாற்றைப் பொது எல்லையாக்கினர். அந்நிகழ்ச்சியை நிலைபேறுடையதாக்க வேண்டுமென்றெண்ணிய இருநாட்டுப் பேராளர்களும் (பிரதிநிதிகளும்) புலவர்களை வெள்ளாறு பொது எல்லையானது பற்றிச்