பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

445 கால்டுவெல்


குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்நிலப் படிவு ஏற்பட்டிருக்க வேண்டும்.

கிரேக்கச் சுவடுகள் இல்லை

காயல் போன்ற இடங்களில் எனக்குக் கிரேக்கச் சுவடுகள் கிடைத்தது. கொற்கையை அகழ்வாய்வு செய்யும்போது நான் கிரேக்க அடையாளங்களை எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. முன்னய நிலமட்டம் தற்போது உள்ளதைவிட8 அடிக்குக் கீழே இருந்தது. நிலத்தைத் தோண்டி எடுக்கும்போது மனித குடியிருப்புகளும் மட் பாண்டங்களும் கிடைத்தன. எதுவும் தமிழர்களுடையதாக இல்லை. இரண்டு சிங்கள செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் கல்வெட்டு எழுத்துக்கள் தெளிவற்று மங்கியுள்ளன.

புத்தர் சிலைகள்

அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலைகள், ஒன்று ஊரினுள்ளும் மற்றொன்று வயல்வெளியிலும் கிடைத்துள்ளன. பிறமதக் கடவுளாக இருப்பினும் இங்கு வணங்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு வெளியே எடுத்த சிலையிலும் ஒருவர் மாலையிட்டு வழிபட்டார்.

முதுமக்கள் தாழி

இங்கே மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இங்குள்ள மக்கட்கு இதுபற்றிய அறிவு எதுவுமில்லை. ஐரோப்பியர்கள் இங்கு முன்னாளில் வாழ்ந்த இனம் அழிந்திருக்க வேண்டும் என்று நம்புகின்றனர். இதற்கு வேறு சான்றுகள் கிடைக்கவில்லை. சாதாரண பாண்டங்களை விட இத்தாழிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. இதனுள் கிடைத்த பிற பாத்திரங்கள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.

வியப்பூட்டும் மனித எலும்புகள்

இரு தாழிகளில் எலும்புகள் இல்லை. ஆனால் எலும்புத் துகள்களும் மண்டையோடும் கிடைத்தன. இங்கு வாழ்ந்த மக்களின் பழக்கத்தை இது காட்டுகின்றது. மண்டையோடுகளில் உப்புக் கற்கள் நிறைத்துவைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள மக்கள் இதனை வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். எனது கூடாரத்திற்கு ஒரு பெண் வந்து பார்த்துச் சென்றது விந்தையானது.

காயலில் புதை பொருளாய்வு

நான் பழைய காயலை இருமுறை பார்வையிட்டேன். ஒரு நாள்