பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 446

ஒன்பது இடங்களில் நிலத்தைத் தோண்டிப் பார்த்தேன். மூன்று அடிக்குக் கீழே வீட்டின் தளம் தென்பட்டது. முக்கியமான எதுவும் கிட்டவில்லை. ஒரு நாளுக்குரிய மிகச் சிறிய வேலை இது. ஆனால் ஒரு மாதமாக வேலை நடந்தது. அங்குள்ள முழுப் பரப்பையும் ஆராய்ந்ததன்மூலம் எனக்கு மார்க்கோபோலோவும், முகமதிய வரலாற்றாசிரியனும் வணிகத் தொடர்பாகக் கூறியது உண்மையென்பது புலனாகின்றது.

சீன அரேபிய மட்பாண்டங்கள்

அரேபியா சீனா போன்ற நாடுகளிலிருந்து மட்பாண்டங்கள் தருவிக்கப்பட்டதாக மார்க்கோபோலோ குறிப்பிடுகின்றார். திறந்த வெளிகளில் உடைந்த சீன அரேபிய பாண்டங்களைச் சேகரித்தனர். ஒரு வண்டி நிறைந்த பாண்டங்கள் கிடைக்குமெனினும் மாடுகளின் குளம்புப் பட்டும் ஏர்க்கால் பட்டும் அவை நொறுங்கின. எனவே, பாண்டங்கள் முழு வடிவில் கிடைக்காமல் போயின. பழைய காயலில் தற்போது லெப்பைகளும் ரோமன் கத்தோலிக்க மீனவர்களும் குடியிருக்கின்றனர்.

குருட்டு நம்பிக்கை வாய்ந்த அச்சங்கள்

ஐரோப்பியர்கள் இங்குள்ள பழமையான பொருட்களை அகழ் வாய்வு செய்யும்போது இங்கு வாழும் மக்கள் அவற்றை பழமையாகக் கருதுவது இல்லை. மறைந்துள்ள பொருட்களை வெளிக் கொணருவது பெருமுயற்சியாகும். புதைந்துள்ள பெருஞ்செல்வங்களைக் கெட்ட ஆவிகள் காத்து வருவதாகவும், அவற்றை வெளியே எடுத்தால் அவை சினமுற்று ஊரையே அழித்துவிடும் என்றும் அச்சமுற்றனர். கோவில் அருகில் தோண்டமாட்டேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன். ஆறுமுக மங்கலத்திலுள்ள எனது நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேய்களோடு சண்டையிட்ட கதையைக் கூறுவர். அவர் முன்பு திருநெல்வேலி கலெக்டருக்கு உதவியாளராக இருந்தார். முதல் நாள் அகழ்வாய்வுக்குப் பின்னர் இரவு அவர் கனவில் ஒரு பெண் பேய் வந்து மிரட்டியது. காலையில் விழித்தபோது கால்கள் இரண்டு கழுத்தைப் பின்னிக் கொண்டன் விடுவிக்க முடியவில்லை. இக்கதையை அவர் என்னிடம் சொல்லாமல் என் உதவியாளரிடம் சொன்னார்.

அகழ்வாய்வில் வியப்புக்குரிய நிகழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலி கலெக்டர் ஒருவர் புதையல் ஒன்றைத் தோண்டியெடுக்க முனைந்தார். அப்புதையல் பேய்களால் காக்கப்படுவதாக நம்பினர். அவர் பலரால் எச்சரிக்கப்பட்டும் ஐரோப்பியர் என்பதால் அதைப்பற்றி கவலைப்படவில்லை. முதல் நாள்