பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

447 கால்டுவெல்


வேலை முடிந்ததும் தனது கூடாரத்தில் இரவில்படுத்திருந்தார்.காலையில் அவர்தம் பங்களாவின் பல மைல்களுக்கு அப்பாலுள்ள பாளையங் கோட்டையில் படுத்திருந்தார். அவரது கூடாரம் ஆற்றங்கரையில் வீசியெறியப்பட்டிருந்தது. அகழ்வாய்வு நடந்ததற்கான சுவடுகள் ஏதுமில்லை,

அரேபிய காசுகள் கண்டெடுக்கப்படல்

சில ஆண்டுகளுக்கு முன்னர் முகமதிய தங்கக் காசுகள் திருநெல்வேலி மாவட்டத்துக் காயலின் அருகிலுள்ள சாலையில் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றைத் தவிர ஏனையவை அரேபிய நாணயங்கள். அவை கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. அரேபிய வணிகர்கள் இந்தியாவிற்கு வந்தபோது மார்க்கோபோலோவருவதற்கு முன்னர் 1272இல் கொண்டு வந்தனர். புதுக்கோட்டையினின்றும் திருச்செந்துருக்குச் சாலைபோடும் போது கூலிகளால் இவை கண்டு பிடிக்கப்பட்டன. அவ்விடம் தென் திருப்பேரிக்கும் அருகில் உள்ளது. அதன் அருகில் உள்ள நகரம் ஆழ்வார் திருநகரியாகும். காயல், காயல் பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் அரேபியர்கள் தங்கியிருந்து வணிகம் செய்தனர். இங்குள்ள புதையல்கள் மக்களால் கள்ளருக்கும் கலகங்களுக்கும் பயந்து புதைத்துவிட்டு பின்னர் எடுக்காமல் விட்டவையாகும். இம்மக்கள் தங்கள் உயிருடன் உடமையான செல்வங்களையும் இழந்திருக்கின்றனர்.

1873இல் கலெக்டரால் வருமானத்துறைக்கு எழுதப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகின்றேன். 1872 ஆம் ஆண்டு டிசம்பர் 25 இல் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுத் திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் செப்புக்குடம் நிறைந்த தங்க நாணயங்களைக் கண்டெடுத்தனர். அச்செப்புக் குடம் ஆறு படி அளவு கொண்டது.

2. அப்புதையலின் மதிப்பு ஒரு இலட்சம் ரூபாய் ஆகும்.

3. தொழிலாளர்கள் முதலில் மறைக்க முயன்றனர். பின்னர் அது வெளியாகிவிட்டது. தாசில்தார் போய் 8000 ரூபாய் மதிப்புடைய நாணயங்களை மீட்டார். இதனை ஒரு சிறுமி தன் வீட்டினின்றும் சட்டியில் வைத்து எடுத்து மறைத்து ஓடினாள்.அலுவலர்களுக்கு முன் விழுந்து சட்டி உடைந்து காசுகள் சிதறிவிட்டன.

4. ஏனையவை புதைக்கப்பட்டன. புதைத்த சுவடுகளும் அழிந்து விட்டன ஒரு காவல்காரர் 900 ரூபாய் மதிப்புள்ள காசுகளைத்தன் பங்குக்காக வைத்திருந்தார்.