பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 448

5. நான் சட்டத்தின் மூலமாக அவற்றை மீட்க முனைந்தேன். முடிய வில்லை. உரிமை வழக்கு மன்றத்தில் மீட்கப்பட்ட நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன. வழக்கு முடிவில் அப்புதையல் கண்டெடுக்கப்பட்டவர்க்கே உரியது என்று தீர்ப்பு வந்தது.
6. அப்புதையல் கடற்கரையில் ஆழ்வார் திருநகரியினின்றும் 15 மைல் தூரத்தில் தாமிரபரணிக் கரையில் புதைக்கப்பட்டிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது காயலில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. அனைத்துக் காசுகளும் அரபியாவினுடையது. ஒன்று ஐரோப்பிய காசு. கி.பி.1236ஐச் சார்ந்தது. ஒன்றில் முகமதிய ஆண்டு 71 என்றும், மற்றொன்றில் முகமதிய சுல்தான் சலாவுதீன் உருவமும் பதிக்கப்பட்டிருந்தது.

காசுகளின் வருணனை கீழே தரப்பட்டுள்ளது:

மொத்தக் காசுகளின் எண்ணிக்கை 31 ஆகும். எழுத்துக்கள் அரேபி கூபிக். ஒன்று பீட்டர் ஆப் அராகன் காசு. இது 1276 ஆம் ஆண்டைச் சார்ந்தது. ஏனையவை 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. சில காசுகளின் காலம் ஐயத்துக்குரியவை என்றாலும் அவை 13 ஆம் நூற்றாண்டிற்கும் பிந்தியவைதான்.