பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 38


சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது (தொல். சொல். 400, உரை - ந.ச.). ஆரிகன் காவு என்றால் ஆரியர்களின் காவல்காரன், ஆரியன் அல்லது ஆர்யா, அதாவது ஹரிஹரபுத்ரா, ஐயனார் என்ற சுத்தமான தமிழ்ப் பெயரையுடையவர். எல்லைக் காவலரென எண்ணப்பட்டு வந்தது. ‘காவு’ என்பது தமிழ்க் ‘காவல்’ அதாவது ‘காவற்காரன்’ என்பதன் மலையாளச் சொல் (கா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குச் சோலை என்ற பொருளும் உண்டு. கா என்பது காவல் என்றும் திரிந்து வழங்கும். எடுத்துக் காட்டு: திருவானைக்காவல் - ந.ச.).

இது குற்றாலத்திற்கு அருகிலுள்ள மலைகள் வழியாகத் திருவாங்கூருக்குச் செல்லும் கணவாய் வழியாய் அமைந்துள்ளது. குறிப்பிட்ட இக்கணவாய் ‘அச்சன்கோவிற் கணவாய்’ என்று குறிப்பிடப்படுகிறது. பிற்காலத்தில் இவ்வழி பயனற்றதாகிவிட்டது. அம் மலைகளிடையேயுள்ள இப்போதைய கணவாய் ‘ஆரியன்காவு’ என்பது. கன்னியாகுமரிக்கு வடமேற்கே தென் திருவிதாங்கூரிலுள்ள மாவட்டமாகிய நாஞ்சில் நாடு முழுவதும் பாண்டிய நாட்டிற்குள் அடங்கியிருந்தது. அச்சன் கோவில் கணவாய்க்கு நுழையும் வழி திருவாங்கூர் என்று வழங்கப்படும் நகருக்கு மேற்கே உள்ளது. இச்சிறு நகரத்தின் பெயரே திருவாங்கூர். இதுவே நாட்டிற்கும் பெயராயிற்று. நாஞ்சில்நாட்டுக் கல்வெட்டுகள் இக்கூற்றின் உண்மையை விளக்குகின்றன. (நாஞ்சில் நாட்டின் விரிவான வரலாற்றிற்குச் சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே. பிள்ளையின் ‘சுசீந்திரம் கோயில்’ என்று ஆராய்ச்சிப் பெருநூல் காண்க - ந.ச.).

நாம் பார்த்தபடி சோழர்களும் பாண்டியர்களும் பொது எல்லையை ஒப்புக் கொண்டார்கள். அதே போலச் சேர பாண்டியர்கள் பொது எல்லையை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அச்சன் கோவில் கணவாய் பாண்டிய நாட்டிற்கு மேற்கு எல்லையாகவும், சேரனுடைய செய்யுளில் சேர நாட்டின் கிழக்கு எல்லை தென்காசி அச்சன்கோவில் கணவாய் அன்று என்றும் கூறப்படுகிறது. இதன்படி, குற்றாலத்தையும் சேர்த்துத் திருநெல்வேலி வட்டத்தி (தாலுக்கா)லுள்ள தென்காசியின் பெரும்பகுதி திருவாங்கூரைச் சேரும். தென்காசி ஒரு காலத்தில் திருவாங்கூரைச் சேர்ந்ததாய் இருந்திருக்கக் கூடும். ஆனால், கல்வெட்டுகள் 15, 16 ஆம் நூற்றாண்டுகளிலேனும் அது பாண்டியர்கள் பிடியிலிருந்ததென்று கூறுகின்றன. பாண்டிய மாநிலத்தின் மேற்குக் கோடி எல்லையை அச்சன்கோவில் கணவாய்க்குப் பதிலாகத் தென்காசி யெனக் கொண்டால், பழைய அரச வழியின் நகரமாகிய திருவாங்கூர்