பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41 கால்டுவெல்


அரசனுமாகிய அதிவீரராமபாண்டியனது வேண்டு கோளின்படி செய்யப்பட்டது என்று சொல்லப்படுவதால், அவனது காலம் 16 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலமாயிருக்க வேண்டும். மதுரை அரசர்கள் வரிசையிலுள்ள எல்லா அரசர்களுடைய பெயரும் அக்காலத்தவருடைய முழுக் கற்பனை என்று வாதாட நான் முன்வரவில்லை. கல்வெட்டுகளினால் உண்மை நிறுவப்படும் வரையில் (இன்று வரை இது செய்யப்படவில்லை - ந.ச.). அவற்றின் வரலாற்று மதிப்பு நம்பக்கூடியதன்று. இப்போதைக்கு அவை கிறித்துவுக்கு முன் தோன்றிய கலிடோனிய அரசர்களின் படங்கள் எடின்பரோவிலுள்ள ஹோலி ரோட் பாலஸின் சுவர்களைப் அலங்கரிப்பதைப் போன்ற நிலையிலுள்ளன என்று அஞ்சுகின்றேன் (ஆசிரியரின் ஒப்புள்ளம் போற்றத்தக்கது - ந.ச.). எனவே, இப்பொழுது அந்த வரிசைப்பட்டியல்களைக் கவனியாது விட்டுவிடுவது நலமெனக் கருதுகிறேன். இதுவரை - எனக்குத் தெரிந்தவரை - அவ்வரிசையிலுள்ள ஒரே ஒரு பெயர்மட்டும் நாணயத்தின் மூலம் உறுதிப்படுகிறது. சமர கோலாகலன், போர்முழக்கம் செய்பவன் (இது அவன் பெயர் என்பதைவிட அவனுக்கிட்ட விருது என்றே தோன்றுகிறது) என்ற அப்பெயரையே சர் வால்டர் எலியட்டுக்குச் சொந்தமான ஒரு நாணயத்தில் கண்டேன். ஆனால் அந்தக் காலம் தெரியவில்லை. இது ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தது. ஆனால், அத்துறையில் மிகச் சிறிய அளவிலேயே செயல்கள் நடைபெறுகின்றன (90 களாகியும் ?! - ந.ச.).

ஆதியில் தோன்றிய பாண்டிய அரசர்களுடைய பழைய வரிசையின் இறுதி அரசர் இருவரின் பெயர்கள் ஒரு கல்வெட்டிலிருப்பது சிதம்பரத்திலுள்ள டாக்டர் பர்ன்வெல் என்பவரிடமிருந்து அறிந்த செய்தி வாயிலாகத் தெரிகிறது. அவர்கள் விக்கிரம பாண்டியனும் அவன் மகன் வீரபாண்டியனுமாவார்கள். அந்த வீரபாண்டியன் ராஜேந்திர சோழனால் முறியடிக்கப்பட்டான். (அச்சோழன் வீரசோழன் என்றும் கோப்பரகேசரி வர்மன் என்றும் வழங்கப்பட்டான்.) நாம் அறிந்துள்ளது போல இது 1064 இல் நடந்தது. ஆனால், விக்கிரம பாண்டியன், வீரபாண்டியனுடைய ஆட்சிக்காலம் இதற்கும் முந்திய காலம். எனவே, அவர்கள், பாண்டி நாட்டைச் சோழர்கள் கைப்பற்றிய காலத்திற்கு முந்தியவர்கள். பாண்டிய அரசர் பலர் ‘வீரன்’ என்ற பெயரையுடையவராயிருந்தனர். ஆனால், அவர்களுள் ஒருவனே மிக்க புகழ் வாய்ந்தவனாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், பல சிற்றுார்கள் அப்பெயருடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வீரபாண்டிய பட்டணம், வீரபாண்டியபுரம் என்பன எடுத்துக்காட்டுகள் (ஊர்ப் பெயர்கள் வரலாற்றுக்கு உதவுவது