பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47 கால்டுவெல்


எனக்குத் தெரிவித்துள்ளார். அவை திருநெல்வேலி மதுரை நகரங்களிலுள்ள சாதனங்களின்றும் முடிவு செய்யப்பட்ட பல செய்திகளுடன் பொருத்தமாயுள்ளன. பழைய பாண்டிய வமிசத்தினர், சோழர், சோழ பாண்டியர் மூவரும் பகை அரசவழியினர் என்றும், ஒவ்வொருவரும் வாய்ப்பு ஏற்பட்டபொழுது தம்மைச் சார்ந்தவர்களால் தாமே வல்லமை மிக்கவர் என்று குறிக்கப்பட்டார் என்றும் கூறப்படும் ஆதார பூர்வமான நம்பிக்கைச் செய்திகளால் அவர்களுள் முரண்பாடுகள் இருந்தன என்பது தெரிகிறது.

இந்தக் காலத்தில் புகழ்வாய்ந்தவனாய் இருந்தவன் இராசேந்திர சோழன். டாக்டர் பர்னல் கண்டுள்ள காலம், என்னுடையதோடு பொருந்தியிருப்பது கண்டு மிக மகிழ்கிறேன்! அவனுடைய கல்வெட்டுகளிலேயே அவன் பெயர் வீரசோழன், முதல் குலோத்துங்க சோழன், இராச ராசேந்திர சோழன், இராசேந்திர சோழன், நரேந்திர சோழன், இராசராச நரேந்திர சோழன் என்று பலவிதமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அவன் கோப்பரகேசரி வர்மன் என்றும் வழங்கப்பட்டான் என்பதும் கூறப்படுகிறது. ‘கோ’ - அரசன், ‘பரகேசரி’ என்பது அந்நியர்களுக்குச் சிங்கம் என்ற பட்டப்பெயராகவே இருக்க வேண்டுமே தவிர உண்மைப் பெயராய் இருத்தலியலாதென்று நான் எண்ணுகிறேன். இதே பெயர் பல அரசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் நான் அறிகிறேன். செவிவழிக்கதையிலுள்ள இராசேந்திர சோழனும் திருநெல்வேலிக் கல்வெட்டுகளில் காணப்படும் இராசேந்திர சோழனும் ஒருவனே என்று நான் கூறியதுபோல அவன் 1064 முதல் 1113 வரை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்றும், மேற்கண்ட எல்லா விருதுகளும் ஒருவனைக் குறிப்பிடுவனவே என்றும், தஞ்சையிலும் மாமல்லபுரத்துக் கற்கோவில் ஏழனுள் வராகசாமி கோவிலிலும் கிடைத்த கல்வெட்டுகள் குறிப்பதாக டாக்டர் பர்னல் எண்ணுகிறார்.

இளவரச வீரன் அல்லது இராசேந்திர சோழனைப் பற்றிய மேலும் சில குறிப்புகளை அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

1079 இல் அவனுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அழிந்து போனது என ஆல்பிரூனி (Al-Biruni) என்பவர் கூறும் தஞ்சாவூரை அவன் மீண்டும் பெற்றிருக்க வேண்டும். பழைய சாளுக்கியர்களின் வீரப்பிரதாபங்களும் புகழ்ச்சிகளும் இச்செய்தியை உறுதியாக்குகின்றன. உண்மையில் அவர்கள் அவற்றிற்கு உரியவர்களே. இவன் பிராமணர்களையும் சைவசமயத்தையும் ஆதரித்தான் என்பது தெரிகிறது. ஆனால்,