பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 52


ஆஜாம்-தகி உதீன் முன்போலவே முதல் அமைச்சனாய் - உண்மையில் நாட்டை அரசு செலுத்துபவனாய் இருந்தான் என்றும் அவன் பதவியில் அவன் மகன் சுராஜுதீனும், பேரனான நிஜாம் உதீனும் வாரிசாய் வந்தனர் என்றும் வாசபு கூறுவதால், வீரபாண்டியன், சுந்தரபாண்டியனுக்குப் பின்னும் வாழ்ந்து அரசு செலுத்தியிருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

அல்லாவுதீன் படையெடுத்து வந்தபோது வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் இருவரும் மலபாரின் அரசராய் இருந்தனர் என்று மற்றொரு மகம்மதிய வரலாற்றாசிரியராகிய அமிர் குஸ்ரு என்பவர் கூறுகிறார். படையெடுப்புப் பற்றி அவர் தரும் குறிப்புகள் வருமாறு: ‘மாலிக் நாய்பு அல்லது மாலிக்காபூர் தலைமையில் வந்த அல்லாவுதீன் படையானது, 1310 ஆம் ஆண்டு நவம்பரில் டில்லியை விட்டுப் புறப்பட்டது. அப்படை பல்லவ அரசனுடைய தலைநகராகிய துவார சமுத்திரத்தை நொறுக்கியது. மேலுள்ள நாடுகளைப் பற்றிய செய்திகளை விசாரிப்பதற்காக அவன் பண்ணரி என்ற இடத்தை அடைந்து அங்குத் தங்கினான் என்றும் சொல்லப்படுகிறது. அப்பொழுது மலபாரை ஆண்டுவந்த மூத்தவனான வீரபாண்டியனுக்கும் அதுவரை ஒற்றுமையாகவே அரசாட்சி புரிந்து வந்த இளையவனான சுந்தரபாண்டியனுக்கும் பகை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் படையெடுத்ததை அறிந்த துவார சமுத்திரராய் இருந்த பல்லாலதேவன் அவர்களுடைய காலியான இரு நகரங்களின் மேல் படையெடுத்துச் சென்று அங்குள்ள வியாபாரிகளைச் சூறையாடினான் என்பதும், ஆனால் மகம்மதியப்படைகளின் முன்னேற்றத்தைக் கேள்வியுற்றுத் தன் சொந்தநாடு திரும்பினான் என்பதும் அறிவிக்கப்பட்டன. துவார சமுத்திரத்தைக் கைப்பற்றியபின் மாலிக் நாயுபின் படை இருவருள் மூத்தவனாகிய மஞ்சள்முகத்துப் பீர்ராயின் தலைநகரை நோக்கிச் சென்றது. அந்நகரத்தைக் கைப்பற்றி எல்லாவற்றையும் அவன் அழித்தான்; பின்பு பிர்துவிலிருந்து கான் வரை முன்னேறினான். பின்பு இளையவனாகிய சுந்தரபாண்டியன் வசித்து வந்த மதுரையை நோக்கி விரைந்தான். ஆனால், இரண்டு மூன்று யானைகளை மட்டும் விட்டுவிட்டு இராணிகளுடன் ராய் ஓடிவிட்டதால், வெற்றுநகரத்தையே அவன் கண்டான். யானைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவைகளிருந்த கோவிலுக்கும் தீ வைத்தனர். இதன் பிறகு மாலிக்காபூர் டில்லிக்குத் திரும்பினான்.

எலியட்ஸின் ‘மகம்மதிய சரித்திரக்காரர்கள்’

மாலிக்காபூரின் படையைக் கண்டதும் மலபார் அரசன் காடுகளில் மறைந்து கொண்டான் என்று வாசபு கூறுகிறார். மாலிக்காபூர்