பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55 கால்டுவெல்


கிழக்குக் கடற்கரையிலும் இலங்கையிலும் பரவியிருக்க வேண்டும். திருநெல்வேலியிலுள்ள காயல் பட்டினமே கிழக்குக்கடற்கரையிலுள்ள அவர்களின் முக்கியக் குடியேற்றமாகும். ஹநிதன் அராபியர்கள் என்னும் தென்னராவியாவிலுள்ள சபாயியர்கள் கிரேக்கர்களின் வருகையைப் பின்பற்றி முன்பே இந்தியக் கடற்கரைக்கு அடிக்கடி வந்துள்ளார்கள். அந்த அராபி வியாபாரிகளின் வழிவந்த கலப்பினத்தவர்கள் மேற்குக் கடற்கரையில் மாப்பிள்ளைகள் என்றும் கிழக்குக் கடற்கரையில் லப்பைகள் என்றும் வழங்கப்பட்டார்கள். சாதாரணமாகத் தமிழ்மக்கள் அவர்களைத் துலுக்கர் (துருக்கியர்) அல்லது ஜோனகர் (யவனர்) என்று வழங்கி வந்தார்கள். மாரிக்கன் அல்லது மாராகன் என்பது அவர்களுடைய சாதாரண பட்டப்பெயர். இச்சொல் கப்பலோட்டி எனப் பொருள்படும். இது அவர்கள் முதலில் மாலுமிகளாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது. இது உண்மையே. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி மொழி தெரியாது. ஆனால், அவர்கள் வாழ்ந்து வந்த நாட்டின் தாய்மொழியாகிய தமிழ் அல்லது மலையாள மொழியையே பேசி வந்தார்கள். ஹிந்துஸ்தானி பேசுகிறவர்களாகிய முகம்மதியர்கள் - பட்டானியர்களும் மற்றவர்களும் - வடவிந்தியாவிலிருந்து வந்து முழுதும் வேறுபட்ட தனி இனத்தினராய் வாழ்ந்தார்கள்.

காயல்

மத்திய காலத்தில் திருநெல்வேலி சரித்திரத்தில் ஏற்பட்ட மிக்க சுவையான நிகழ்ச்சி கி.பி.1292ல் மார்க்கபோலோ காயலுக்கு வருகை புரிந்ததாகும்.

மார்க்கபோலோ என்ற நூலில் (2வது வால்யூம், 307ல்) கர்னல் யூல் கூறியிருப்பதைத் தெரிவிக்கின்றேன்:

“இப்போது மறந்துவிடப்பட்ட காயல், சென்னை மாகாணத்திலுள்ள கடற்கரைப் பகுதியாகிய திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்த துறைமுகமாய் விளங்கியது. நம் நூல் ஆசிரியர் காலத்தவராகிய ரஷித் உத்தீன் அது மலபாரின் துறைமுகமாய் இருந்தது என்று குறிப்பிடுகின்றார். ஆனால், அந்தப் பெயர் பவால், கபால் (பார்க்க. ! எல்லியட் 1 பக். 69-72) என்று பிரதிகள் எடுக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் தவறுதலாக எழுதப்பட்டது. கவாட்ரிமியஸ் அப்துர் ரஸாக்கின் வெளியீட்டிலும் காபில் என்று தவறுதலாகப் பிரதி செய்யப்பட்டுள்ளது. ‘செரந்திப்’ அல்லது ‘சிலோன்’ என்று வழங்கப்படும் தீவிற்கு எதிரில் ஒரு ஓரத்தில் அமைந்துள்ள இடம் என்றும் அதையே தாம் மலபாரெனக் கருதுவதாகவும் அவர்