பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 58

 ‘காயல் நகரத்தைப் பற்றியது’ என்ற தலைப்பில் எழுதியுள்ளது:

காயல் பெரியதும் சிறந்ததுமானதொரு நகரம். அது ஐந்து உடன் பிறந்த அரசர்களுள் ஒருவனாகிய அஷர் (ஈஸ்வரன்) என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. மேற்கே ஹார்மஸ், கிஸ் (பெரிஷியன் குடாவிலுள்ள ஒரு தீவு), ஆடன், அராபியா முழுவதிலுமிருந்து குதிரைகளையும் மற்றச் சாமான்களையும் விற்பதற்காக வரும் எல்லாக் கப்பல்களும் இந்த நகரத்திற்குத்தான் வரும். ஆகையால், இது அருகிலுள்ள நாடுகளிலிருந்து திரளான மக்கள் வந்து சந்திக்குமிடமாய் மாறியது. எனவே, காயல் நகரத்தில் வியாபாரம் மிகுதியாய் நடந்தது. அரசன் ஏராளமான செல்வம் உடையவனாயிருந்தான். விலைமதிக்கவியலாத எண்ணற்ற அணிகளால் அவன் தன்னை அணிசெய்து கொண்டிருந்தான். அவன் பெரிய சமஸ்தானங்களை உடையவனாயும் தன் ராஜ்யத்தை நேர்மை நியதியுடன் நடத்துபவனாயுமிருந்தான்; அயல் நாட்டவருக்கும் வியாபாரிகளுக்கும் அதிக சலுகைகள் காட்டினான். அதனால் அவனுடைய நாட்டிற்கு வருகை செய்வதில் அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். அக்காலத்தில் பல மனைவிகளையுடையவனை மக்கள் அதிகமாகப் போற்றினமையால், அந்த அரசனுக்குச் சுமார் முந்நூற்று மனைவியர் இருந்தனர்.

‘காயல் மலபாரின் முக்கியத் துறைமுகப்பட்டினமாய் விளங்கியமையால், மலபார் அதன் வியாபாரம் முதலியவைகளைப் பற்றி மார்க்கபோலோ தரும் செய்திகள் காயலுக்கும் உண்மையில் பொருந்துவனவாயுள்ளன. காயலை ஆண்டவன் சுதந்தர அரசனல்லன். அவன் அக்காலத்தில் மலபார் நாட்டையும் பாண்டிய சோழ நாடுகள் முழுவதையும் ஆண்டு வந்தவனும், மார்க்கபோலோவால் ‘சுந்தரர் பண்டி தேவர்’ என்று வழங்கப்படுபவனுமாகிய சுந்தரபாண்டியதேவன் தம்பி. அவனே காயலின் பிரதிநிதியாயும் இருந்தான். காயலுக்குச் சற்றுப் புறத்தே அமைந்துள்ள மாறமங்கலம் என்ற இடத்தில், சுந்தரபாண்டியனைப் பற்றிய கல்வெட்டுகளை நான் பார்த்தேன்’ என்று போலோ தொடர்ந்து கூறுகின்றார்.

‘இங்கே குதிரைகளை வளர்ப்பதில்லை. எனவே, நாட்டின் பெரும்பகுதியான செல்வம் குதிரைகளை வாங்குவதில் வீணாகிவந்தது. கிஸ், ஹார்மஸ், தோபர் (ஈமான் கடற்கரையிலுள்ள தாபர்), சோயர் (ஒமனிலுள்ள சுகர்), ஏடன் முதலிய இடங்களிலுள்ள வியாபாரிகள் ஏராளமான குதிரைகளை இந்த அரசனும் இவனுடைய நான்கு உடன் பிறப்பாளர்களுமுள்ள நாட்டின் எல்லைகளுக்குக்