பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 60

 கம்பாயத்து மற்றும் அவற்றின் அருகேயுள்ள மற்றத் துறைமுகங்களுக்குப் பத்தாயிரம் குதிரைகள் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட குதிரைகளின் மொத்த விலை 22,00,000 தினார்கள். அவர்கள் அக்குதிரைகளை நாற்பது நாள்கள் குதிரை லாயங்களிலே முளைக்குச்சிகளில் கயிறுகளால் கட்டி வைத்துத் தீனியளித்துக் கொழுக்க வைத்தார்கள். அதற்குப் பிறகு அக்குதிரைகளுக்குச் சரியாகப் பயிற்சி அளிக்காமலே அவைகளுக்குத் தகுந்த சேணங்களும் அதோடு பிணைக்கப்பட்ட உலோக லாடம்கூட இல்லாமலும் அசுரர்களைப் போல அவைகளின் மேலேறிச் சவாரி செய்தார்கள். சீக்கிரத்திலேயே மிக்க திடமும் உறுதியும் சுறுசுறுப்பும் வேகமும் உற்சாகமுள்ள குதிரைகள் மெலிந்து சக்தியற்றுப் பயனில்லாதவை ஆயின. சுருங்கக் கூறின், அவை ஒன்றுக்கும் உதவாததையாயின எனலாம். ஆகையால் அவர்களுக்கு ஆண்டுதோறும் புதுக்குதிரைகள் வரவழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது (எலியட்டு, தொகுதி 3-34).

போலோவினால் குறிப்பிடப்படும் விலை ஐநூறு தினார்களுக்குச் சரியாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. அக்காலத்தில் ஆசியாவில் விலையுயர்ந்த உலோகங்களின் மதிப்பிற்குத் தகுதியாக இது நூறு மார்க்கு வெள்ளி நாணயத்திற்குச் சமமாகும். வாசபு கூறும் விலை இருநூற்று இருபது தினார் செம்பொன், இவ்விலைக்குச் சற்றும் பொருந்தாததாயிருக்கிறது. ஆனால், உண்மையில் அவ்வளவு பொருத்தமற்றதன்று; ஏனெனில், செம்பொன் தினார் என்று சொல்லப்படும் நாணயம் இரண்டு தினார்களின் நாணய மதிப்பிற்கே சமமாய் இருக்குமென்று தோன்றுகிறது.

மார்க்கபோலோ காலத்தில் வாழ்ந்தவராகிய பெர்ஷிய வரலாற்று ஆசிரியர் வாசபு மபாரைக் கீழ்க்காணுமாறு வருணித்துள்ளார். அதாவது நான் எண்ணுவதுபோல் இவர் குறிப்பிடும் மலபார் என்பது மயாரின் துறைமுகமாகிய காயல்.

‘சின்’, ‘மசின்’ என்ற வடசீனா தென்சீனா நாட்டின் வினோதப் பொருள்களும் இந்து சிந்து பிரதேசங்களின் அழகு மிக்கப் பொருள்களும் ஏற்றப்பட்ட ‘ஜங்க்ஸ்’ என்று சீனர்களால் வழங்கப்படும் பெரிய கப்பல்கள் மலைகள் போன்று காற்றாகிய இறக்கைகளுடன் பாய்விரித்துத் தண்ணீர் மட்டத்தில் மிதந்து சென்று அங்கே எப்பொழுதும் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும். பெரிஷியன் வளைகுடாவிலுள்ள தீவுகளின் செல்வம் முக்கியமாக ஈராக்கு, குராசன் என்னும் இடங்களிலிருந்து ரம்மின், ஐரோப்பா வரை உள்ள மற்ற