பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63 கால்டுவெல்


முழுகிமுழுகி வெளிவருவார்கள். அந்தச் சிப்பிகள் கிளிஞ்சல் அல்லது கடற்பூச்சி (Oysters and sea-hoods) களைப் போன்றிருக்கும். அந்தச் சிப்பிகளில் சிறியதும் பெரியதுமான ஒவ்வொருவிதமான முத்துகள் சிப்பி மீனின் சதையோடு ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த முறையில் மிகுதியாக முத்துகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்துதான் உலகெங்கும் பரவியுள்ள முத்துகள் உண்மையில் வரப்பெற்றன. அந்தச் சமஸ்தானத்தின் அரசன் அந்த முத்துகளில் தனக்குச் சேர வேண்டிய பகுதியைப் பெற்றே மிகப் பெரிய செல்வத்தையடைந்திருக்கிறான் என்று நான் சொல்வேன். மே மாதத்தின் பாதி நாள்கள் கடந்ததும் முத்துச்சிப்பிகள் அங்கு அகப்படுவதில்லை. ஆயினும், அந்த இடத்திலிருந்து சுமார் முந்நூறு மைல் துரத்திற்குச் சென்றால், அங்கு முத்துகள் கிடைக்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால், அவை அங்குச் செப்டம்பர் மாதத்திலும் அக்டோபர் மாதப் பாதியிலும் கிடைக்கின்றன. (முத்துக்குளித்தல் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடான திரு. அருணாசலம் எழுதியுள்ள நூல் காண்க - ந.ச.).

மார்க்கபோலோவின் காயல்

இப்பொழுது மார்க்கபோலோவின் காயலுக்கே திரும்புவோம். இக்காலத்தில் இந்த இடம் போலோவினால் வருணிக்கப்பட்ட ‘சிறந்த பெரும் பட்டினத்திற்கு மிக்க ஒப்புமையுடைய தோற்றமுள்ளதாயிருப்பது ஐயமாயிருந்த போதிலும் அதன் ஒப்புமை அங்கே இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பழம்பெருமையை உணர்த்த வல்ல புனித சின்னங்களால் உறுதியாக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இப்போதைய காயல் கிராமத்தின் வடக்கே இரண்டு மூன்று மைல் துரத்தில் ஒன்றரை மைல் தூரம் உள்நாட்டிற்குள் ஏறக்குறைய மாறமங்கலம் வரை முழுப் பகுதியும் உடைந்த சீனக் களிமண் ஓடுகளாலும் எஞ்சிய மட்பாண்டங்களாலும் நிறைந்திருக் கின்றன. இது மார்க்கபோலோ குறிக்கும் காயலுக்கும், அதன் வியாபாரம் காயலுடன் மகம்மதிய சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் மபார் கடற்கரைத் துறைமுகத்தின் ஒற்றுமைக்கும் சிறந்த ஆதாரங்களாய் விளங்குகின்றது. அச்செய்திகளின்படியே அராபியக் கடற்கரையிலிருந்தும் பெர்ஷியன் குடாவிலிருந்தும் எண்ணற்ற மரக்கலங்கள் அடிக்கடி காயலுக்கு வந்து சென்றன. அங்கே சீனக் கப்பல்களாகிய ஜங்குகளும் வந்தன. அத்தகைய சீனஜங்கு ஒன்றிலேதான் மார்க்கபோலோ வந்து இறங்கினார். அதேபோல் திறந்தவெளியில் எல்லா இடங்களிலிருந்தும் அராபிய மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகளையும் பலவிதத்