பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 70


என்றே வைத்துக் கொண்டார். அவர்கள் மகரிஷி மாதவரிடமிருந்து மிக்க உதவி பெற்று வந்தமை கூறப்படுகிறது.

ரைஸின் மைசூர்க் கல்வெட்டில் கொடுக்கப்பட்ட அரசர்களின் வரிசைப் பட்டியல்:

கல்வெட்டு சின்ன பசவண்ண கலைஞானர் கொங்குதேச ராஜாக்கள்
1039 - 1047 சாலர், ஹொய்சலர், 984 - 1043 ...
வினயாதித்தர் 1043 - 1073 - 1068
1065- இரேயங்கா, பெரியங்கா, வீரங்கா 1073 - 1114 ...
1117 - 1138 பிட்டிதேவர், விஷ்ணுவர்த்தனார், திரிபுவனமல்லர் 1114 - 1145 1099 - 1147
1142 -1191 விஜயநரசிம்மர், வீரநரசிம்மர் 1145 - 1188 1147 - 1174
1191 - 1207 வீரபல்லாலர், 1188 - 1233 1174 -
1223 வீரநரசிம்மர் 1233 - 1249 - 1237
1252 சோமர், வீரசோமேஸ்வரர் 1249 - 1268 1237 - 1283
1262 - 1287 வீரநரசிம்மர் 1268 - 1308 1283 – 1313
1310 பல்லாலதேவர் ..... .....

அவர்கள் தலைநகரம் வித்தியா நகரம் அல்லது விசயநகரம் என்று வழங்கப்பட்டது. கல்விக்கு இருப்பிடமான நகரம் என்ற முதற்பெயரே வித்தியா நகரம் என்றும் மகரிஷி வித்யாரண்யா இந்நகரம் தோன்றக் கர்த்தாவாய் இருந்ததால் அவர் நினைவாக இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது என்றும் ரைஸ் என்பார் கூறுகிறார். வித்தியாநகரம் மருவிற்று. இதுவே மகம்மதிய சரித்திர ஆசிரியர்களால் ‘பிஜநகர்’ என்றும் ஆதிகால மேல்நாட்டவர்களால் ‘பிஸ்நகர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், இது கன்னடிய மொழியில் உண்மையில் ஆற்றின் மறுகரையிலுள்ள ஒரு கிராமமாகிய யானைக்குழி என்ற பொருளில் ஆனகுண்டு (குண்டு என்றால் பள்ளம் என்று தமிழ்ப் பொருள் - ந.ச.) என்று பொதுவாக வழங்கப்படுகிறது. இப்போது பல்லாரி மாவட்டம் அமைந்துள்ள ‘பம்பா’ அல்லது துங்கபத்திரை நதிக்கரையில் விசயநகரம் கட்டப்பட்டது. ஹம்பிக்கருகில் இந்நகரின் எஞ்சிய அழிந்த பகுதிகளின் அழகு, இது உன்னத நிலையிலிருந்தபோது இராயர்களின் அழகு மிக்க தலைநகராய் இருந்தது என்பதைக் காட்டுகிறது.

பரம்பரையாய் விசயநகர அரசர்கள் பட்டத்திற்கு வந்த செய்தியும்