பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்துரை

பிஷப் டாக்டர் கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் என்னும் ஆங்கில மூலநூலின் முதல் தமிழாக்கமாகத் ‘தென் பாண்டித் திருநாடு’ என திருபகீரதன் அவர்களின ‘சத்ய கங்கை’யில் 1970 முதல் 1976 வரை வெளியானதே இத்தொடர் பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களைப் பற்றி அறிந்தோர்க்கு இந்த ஆண்டுகள் பற்றிய நினைவுகளும் மறையாமல் நினைவிருக்கும்.

இத்தமிழாக்க நூலைப் பற்றிய உணர்வுப் பிணைப்புகள் பேராசிரியர் அவர்களின் வேறெந்த நூல்களைவிடவும் எனக்கு மிக அதிகமாக உண்டு. இத்தமிழாக்கம் பேராசிரியர் அவர்களின் துணைவியார் எனது தாய் பேராசிரியை திருமதி.கிருட்டிணா சஞ்சீவி அவர்களின் முழு முதல் முயற்சியாகும். நகலகங்கள் புழக்கத்தில் இல்லாத 1950களில் கையெழுத்துப் படியாக எடுக்கப்பட்டு என்னிடம் இன்னும் பத்திரமாக உள்ள மூல நூல் முழுமையும் கானும் போதெல்லாம் என் கண்களைக் கசிய வைக்கும். இந்த மூல நூல் படியெடுப்பும் அதற்கான தமிழாக்கமும் 1955ல் நான் என் தாயின் மடியில் இருந்த காலத்தில் நடந்தது என்பதை நான் அறிந்ததே இந்நூலுடனான எனது உணர்வுப் பிணைப்புகளுக்கான காரணமாகும்.

இத்தொடர் சத்ய கங்கையில் வெளியான போது நானும் இத்தொடரின் ரசிகையானேன். மூலநூலின் சுவை சிறிதும் சிதையாமல் கவனமெடுக்கப்பட்டிருக்கும் இந்நூலின் சுவையை இடையிடையே வரும் பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி அவர்களின் திறனாய்வுக் குறிப்புகள் அதிகரிப்பதாகவே எண்ணுகின்றேன்.

மூல நூலில் காணப்படும் சத்ய கங்கையில் வெளிவராத