பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73 கால்டுவெல்


பெயர்‌ வெட்கட
ராயன்‌
┌───────┴───────┐
ரங்கராஜா (? 1572 - 1585)வெங்கடபதி (? 1585 - 1614)
சந்திரிகிரியில்‌ ( 1749)

‘வீரராமர்‌’ (?) என்னும்‌ இப்பெயர்‌ கல்வெட்டுகளில்‌ காணப்படுகிறது.

ஆனால்‌, வெங்கடபதி அப்பரம்பரையின்‌ கடைசி அரசர்‌.

இப்பரம்பரையிலுள்ள முந்திய அரசர்கள்‌ 14 ஆம்‌ நூற்றாண்டு இறுதிக்கு முன்‌ தென்னிந்தியா முழுவதையும்‌ வென்றார்கள்‌. ஆனால்‌, அவர்கள்‌ சிலகாலம்‌ வரை பாண்டிய வமிசத்தின்‌ கடைசி உண்மையான அரசர்களைத்‌ தொந்தரவு செய்யாது அவர்களே ஆட்சிபுரியும்படி விட்டுவிட்டார்கள்‌. 16 ஆம்‌ நூற்றாண்டில்‌ - சுமார்‌ 1540ல்‌ அவர்கள்‌ மதுரை, தஞ்சாவூர்‌, செஞ்சி முதலிய இடங்களில்‌ நாயக்கர்கள்‌ என்று வழங்கப்பட்ட தங்கள்‌ பிரதிநிதிகளை நியமித்தார்கள்‌. 17 ஆம்‌ நூற்றாண்டில்‌ இந்த நாயக்கர்கள்‌ சுதந்தர அரசர்களாய்‌ ஆட்சி புரிந்தார்கள்‌. தஞ்சாவூரை ஆண்ட கடைசி நாயக்க அரசர்‌ வீரராகவர்‌. வெள்ளித்தட்டு ஒன்றில்‌ செதுக்கப்பட்ட சாசனத்தின்‌ மூலம்‌ நாகப்பட்டினத்தை அவர்‌ டச்சுக்காரர்களுக்கு அளித்தார்‌ என்பது, தெரிகிறது. இச்சாசனம்‌ இன்னும்‌ பட்டேவியா மியூஸியத்தில்‌ இருக்கிறது. சூறையாடுகின்ற இந்தத்‌ தலைவர்கள்‌ தங்களோடு அழைத்துவந்த கலகக்காரர்களின்‌ மீது ஆதிகாலப்‌ போர்ச்சுகீசியக்‌ கிறிஸ்தவர்கள்‌ அதிகமாகக்‌ குற்றம்‌ சாட்டி வந்தார்கள்‌. இக்கலகக்காரர்கள்‌ ‘படகர்கள்‌’ என்பப்பட்டார்கள்‌. ஆனால்‌, இவர்கள்‌ 1544 வரை தென்‌ கோடியை அடையவில்லை.

இந்த இரு சிறு பட்டியலுக்கும்‌ பல சிறுசிறு வேற்றுமைகள்‌ இருப்பதைக்‌ காணலாம்‌. மிக்க புகழுடன்‌ அரசாட்சி புரிந்த அவ்வமிசத்து அரசர்களின்‌ காலம்‌ - உதாரணமாகக்‌ கிருஷ்ணராய்‌ காலம்‌ - இரண்டு பட்டியலிலும்‌ ஒன்றாய்‌ இருக்கிறது. ஒவ்வொரு பட்டியலும்‌ ஏறக்குறையச்‌ சரியானது என்று அதனதன்‌ ஆசிரியர்களால்‌ கூறப்படுகிறது.

விசயநகர அரசர்கள்‌ எப்பொழுதும்‌ இராஜாக்கள்‌ என்று. வழங்கப்படாமல்‌, இராயர்கள்‌ என்றே வழங்கப்பட்டார்கள்‌. இரண்டின்‌ பொருளும்‌ ஒன்றுதான்‌.[1] தமிழிலுள்ள இராயர்‌ என்ற சொல்‌


  1. விஜய நகரராயர்கள் தென்னிந்தியாவில் மிக்க பலம் வாய்ந்த அரசர்களாய் இருந்தமையால், புதிய தமிழ் ஏற்பாட்டின் பொருளில் சீசர் என்ற சொல்லுக்குச் சரியான பதமே ராயர் என்பது (மொழி மாற்றத்தில் அரசியல் செல்வாக்கு காண்க - ந.ச.)