பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77 கால்டுவெல்


விரயநகர அரசரான அன்னதேவ ராஜர் மகம்மது அல்லாவுதீனால் முறியடிக்கப்பட்டதும், எட்டையபுரம் ஜமீந்தார்களின் மூதாதையார் சந்திரகிரிக்குத் தப்பி ஓடினார். அவருடன் ஆயுதமணிந்த உறவினர் அறுபத்துநால்வரும், ஆயுதமணிந்த முந்நூறு வீரர்களும், ஆயிரம் வேலைக்காரர்களும் மற்றும் சில கணக்குப்பிள்ளைகளும், மற்றவர்களும் சேர்ந்து சென்றார்கள். அவர்கள் மதுரையை ஆண்ட அதிவீர பராக்கிரம பாண்டிய ராஜாவிடம் அகதிகளாய்ச் சென்று அடைந்தார்கள். அதிவீரபராக்கிரம பாண்டியர் அவர்களைக் கள்ளர் நாட்டில் ஏற்பட்ட கலகங்களை அடக்க நியமித்தார். அதற்குப் பிரதிநிதியாக அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான கிராமங்கள் கொடுக்க இசைந்தார். இச்சம்பவம் 1423க்கும் 1443க்குமிடையே நடந்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அவர்கள் தென்பாகத்தில் குடியேறித் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பல கிராமங்களைக் கைப்பற்றினார்கள். அவ்வாறு கைப்பற்றிய கிராமங்களுள் ஒன்றிற்கு எட்டையபுரம் என்று பெயரிட்டு அதைத் தங்களுடைய தலைநகராக்கிக் கொண்டார்கள்.

இக்குறிப்புகளில் வரலாற்று நிகழ்ச்சி மாறுபாடுகள் இருக்கின்றன. விசயநகரம் அல்லாவுதீனால் கைப்பற்றப்படவில்லை. 1311 இல் அல்லாவுதீனுடைய தளகர்த்தனான மாலிக்காபூரினால் துவாரசமுத்திரம் கைப்பற்றப்பட்ட நிகழ்ச்சியையே அது குறிக்கலாமென எண்ணுகிறேன். விஜயநகர அரசர்களுள் கடைசி அரசர் அன்னதேவராஜர் அல்லர். ஆனால், 1656 இல் தட்சிணை மகம்மதிய இளவரசர்களால் முறியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இராமராஜரே இவ்வமிசத்தின் கடைசி அரசர்.

1645இல் மகம்மதியர்கள் சந்திரகிரியைக் கைப்பற்றினார்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் இருப்பதுபோலக் கதைகளிலிருந்து பொதுவான குறிப்புகளையே சரியென்று ஒப்புக் கொள்ள இயலும்.

விஜயநகர அரசு அழிந்ததே தவிர, அதன் அரச மரபு முழுவதும் அழிக்கப்படவில்லை. அக்குடும்பத்தினருக்கு வேறோர் இடத்தில் புதிதாகத் தங்கள் ஆதிக்கத்தை நிறுவத்தக்க வலிமை இருந்தது. ஆகையினால், பெனு கொண்டாவுக்கு அரண் கட்டி அதை ஒரு மலைக்கோட்டையாக மாற்றினார்கள். இந்தப் பெனுகொண்டா விஜயநகரத்தைப் போலவே புதிய பல்லாரி மாவட்டத்தில் பெங்களூருக்கு வடக்கே தொண்ணுற்று ஏழு மைலில் இருக்கும் உயர்ந்த மலையாகும். அடிவாரத்தில் பெரிய அரணுடன் ஒரு நகரத்தை ஏற்படுத்தினார்கள். அங்கு அவ்வரசர்கள் ஒரு நூற்றாண்டு வரை