பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 78


அதிகாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் கிருஷ்ணாநதிக்குத் தெற்கே முக்கியமாக நாயக்கர்களால் ஆளப்பட்டுவந்த மதுரை தஞ்சாவூர் முதலிய இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் தங்கள் மூதாதையர்களின் பரம்பரை உரிமை உண்டு என நம்பிவந்ததால், ஆண்டு வந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு பல பாளையக்காரர்கள் சுதந்தர அரசர்களாய் மாறினார்கள். அவர்கள் விஜயநகர அரச வாரிசின் எஞ்சியவர்களாகப் பெயரளவில் சக்தியிழந்தவர்களாய் இருந்தார்கள். புதிய சுதந்தர அரசர்களுள் மிக முக்கியமானவர் மைசூர் அரசர். எஞ்சிய பழைய அரச வாரிசுப் பிரதிநிதிகளுள் ஒருவர் சந்திரகிரி அரசர். 1640 ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள் 1 ஆம் நாள் ஆங்கிலேயர்கள் இந்தச் சந்திரகிரி அரசர்களுள் கடைசி அரசரிடமிருந்து ‘மதராஸ்’ நகர நிலப்பரப்பை மானியமாகப் பெற்றார்கள். இந்த அரசருடைய தளகர்த்தன் பெயர் சென்னப்பன் என்பது. அந்த நகர மக்களால் அந்நகரம் சென்னப்பன் பட்டணம் (சென்னைப் பட்டணம்) என்று வழங்கப்பட்டது. 1645இல் சந்திரகிரி அரச பரம்பரை இறுதியாக முகம்மதியர்களால் அழிக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய பலம்வாய்ந்த அரச பரம்பரைகளின் சரித்திரங்களின் குறிப்புகள் தெளிவாய் இருந்தபோதிலும் பல செய்திகள் ஐயமாயுள்ளன. 11 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரை திருநெல்வேலி முதலிய இடங்களில் ஆட்சிபுரிந்துவந்த பாண்டியர்களே தென்னிந்தியாவில் பல இடங்களில் வலிமையுள்ளவர்களாயிருந்தார்கள். 11 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்த சோழர்கள் முதன்மையிடத்தை அடைந்தார்கள். அவர்கள் நேரடியாகவும் பிரதிநிதிகள் மூலமாகவும் இரண்டு நூற்றாண்டுகள் வரை ஆட்சிபுரிந்தார்கள். அவர்கள் திருவாங்கூரின் தமிழ்ப் பகுதி அல்லது தென்பகுதியும் உட்பட ஒரிஸ்ஸாவிலிருந்து கன்னியாகுமரிவரை அமைந்துள்ள முழுச் சோழமண்டலக் கரையை ஆண்டுவந்தார்கள். சோழர்கள் அல்லது சோழபாண்டியர்கள் தென்பகுதி முழுவதையும் புகழோடு ஆட்சிபுரிந்த இறுதிக்காலத்தில் துவாரசமுத்திரத்தில் பல்லால அரசவமித்தினர் நாட்டைக் கைப்பற்றினர். ஆனால், அவர்கள் எத்தகைய அதிகாரத்தினால் அவ்வாறு கைப்பற்றினார்கள் - அல்லது அடக்கினார்கள் - என்பது சந்தேகமாயிருந்தது. 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியின் ஆரம்பத்தில் தென்பாகம் சிறிதுகாலம் வரை மகம்மதியர்கள் கைவசமிருந்தது. பின்பு அரசாட்சியின் அதிகாரம் முழுவதும் விசயநகர அரசர்கள் கைவசமாயின. இவர்கள் பல்லால அரசர்கள். சோழ அரசர்கள் அடைந்திருந்த உடைமைகளையும் பலத்தையும்விடச் சிறந்த