பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83 கால்டுவெல்

 பட்டயம் அவனுக்குப்பின் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வந்ததாகக் கூறுகிறது. சுந்தரபாண்டியனின் ஆட்சிக்குப்பின் முப்பதாவது ஆண்டு தேதியிட்ட செப்புப் பட்டயம் ஒன்று டாக்டர் பர்னலிடமிருந்தது. இது கி.பி.1623 ஆம் ஆண்டினது. திருநெல்வேலியிலேயே நான் கண்ட கல்வெட்டுகளால் இதுவரை கிடைத்த செய்திகளிலிருந்து அதிவீரராமன் அந்த மரபின் கடைசி அரசன் என்பது தெரிகிறது. எப்படியாயினும், அவன் கலைஞன், பண்பாடுடையவன்; புகழ்பெற்ற கவிஞனும் ஆவன். அவனுடைய கவிகள் அவனுக்கு அமரத்தன்மை அளித்தன என்று கூறலாம்.

புகழ்பெற்ற செவிவழிக் கதைகளும் வாக்குமூலங்களும் பழைய வரலாற்றுச் செய்திகளும் கல்வெட்டுகளிலிருந்து தொகுக்கப்படும் செய்திகளுடன் ஒப்பிடப்படும்பொழுது அவை நம்பக்கூடியனவாய் இல்லை (இப்படி கால்டுவெல் ஒரே போடாகப் போடுவது தவறு என்பதை இன்று அறியாதார் இல்லை! - ந.ச.). நில அளவையாளராய் இருந்த டர்ண்புல் என்பவர் கர்னல் மக்கன்சிக்காக 1820 இல் விசாரித்தறிந்து கொடுக்கின்ற செய்திகளோடு மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்திகளை ஓர் உதாரணமாக எடுத்துக் கூறலாம். பாளையங்கோட்டையில் 1877 இல் அச்சிடப்பட்ட அவருடைய திருநெல்வேலி நிலவியல்-புள்ளியியல் குறிப்பேடு (Geographical and statistical - Meneoir of Tirunevelly, என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் 25 ஆம் பக்கத்தைப் பார்க்க.) உண்மையில் சுமார் 1823 இல் முடிக்கப்பட்ட சுவையான இந்த நினைவுகள் இந்தியக் காரியாலயத்திலிருந்து ஆர்.கே. பக்கிள் என்ற முன்னாள் திருநெல்வேலிக் கலெக்டரால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த அப்புத்தகம் கண்டெடுக்கப்பட்டது (எப்படி! - ந.ச.). தென்காசியின் நகரம், பழைய கோவில், பழமையான கோட்டை முதலியவைகளைப்பற்றிக் கூறும் குறிப்புகளில் டாக்டர் பர்னல் இந்த இடத்துடன் நேரடியாகவோ பேராளர்கள் வாயிலாகவோ தொடர்பு கொண்டிருந்த பாண்டிய அரசர் பலரின் பெயர்களை அவர்கள் காலத்துடன் சேர்த்துக் குறித்திருக்கிறார். இக்கணக்கின்படி அதிவீரராமபாண்டியன் கி.பி.199 இல் ஆட்சி தொடங்கினான் என்பது குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவன் காலத்துத் தமிழ்க் கல்வெட்டுகள் அவன் ஆட்சி 1562 இல் தொடங்கியது என்று கூறுகின்றன. குற்றாலக் கோவிலிலுள்ள அதேபோன்ற ஒரு வடமொழிக் கல்வெட்டு சுமார் 1565 இல் அவன் ஆட்சி தொடங்கியதாகக் கூறுகிறது. அதேபோல், தன் ஆட்சிக் காலத்தில் தென்காசிக் கோவில் கட்டிய பொன்னம் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆட்சி 1309 இல் தொடங்கியதாக டாக்டர்