பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87 கால்டுவெல்


சமுதாயத்தினிடமும் தன் ஆட்சி பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். ஆனால், இவ்வாறு செயற்படுவது மிகவும் கடினமானதாயிருந்தது. அவன் தன்னுடன் தன்னைச் சார்ந்திருந்த தன் சாதியைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தை மதுரைக்கு அழைத்து வந்தான். அக்கூட்டம் பணிவுடனும் நன்றியுடனும் நடந்து கொண்டது. இச்செயலை விசுவநாதன் திறமையுடன் செய்து முடித்தான்.

ஆனால், அவர் அனைவரும் பேராசையுடன் பெரும் பரிசுகளை எதிர் நோக்கி நின்றனர். அவர்களுக்குத் தாராளமாகப் பரிசுகள் அளிக்கப்படாவிட்டால் அவனுக்கு எதிரிகளாய் இருப்பார்கள்போல் இருந்தது. அக்காலத்தில் அங்குப் பழைய மரபுவழிப் படைத்தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் போதுமான நிலப்பரப்பையும், அதை ஆட்சிபுரியத் தேவையான வலிமையையும் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய நல்லெண்ணமும் நல்லுறவும் அவனுக்கு மிகவும் தேவைப்பட்டன. ஆனால், அவற்றைப் பெறுவது மிகக் கடினமாயிருந்தது. அவர்கள் தலைமுறை தலைமுறையாக நெடுங்கால ஆட்சியின்மையால் முறையின்றிக் குழப்பம் விளைத்து இலாபம் ஈட்டுவது எப்படி என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள். தெலுங்கு அரசன் ஒருவன் குறுக்கிட்டு வேலை செய்வதை அவர்கள் எரிச்சலுடன் கவனித்து வந்தார்கள். அவர்களும், நாடும் அதன் அதிகார உரிமையும் கொடுக்கப்படும் என்று எதிர்நோக்கும் எண்ணமே நகைப்புக்கு இடமாய்த் தோன்றியது. மேலும் கவர்னர் சம்பளத்தையும் அலுவற்பணிகளையும் தன்னைச் சூழ்ந்த தன் இனத்தவரில் தகுதியுள்ளவருக்கே தன்பரிசாகக் கொடுத்து வந்தான். இதனால் அவர்கள் கவர்னரைச் சூழ்ந்துள்ள வேற்றுநாட்டவரைப் பொறாமையுடனும் வெறுப்புடனும் பகை உணர்ச்சியுடனும் மதித்து வந்தார்கள். அன்றியும், பாண்டியர்களைச் சார்ந்தவர்கள் வறுமை நிலையில் மிக்க மனக்குறை அடைந்திருந்தார்கள். அவர்கள் காலத்தினால் எல்லாவற்றையும் அடைய முடியுமென்றும், அமைதியாலும் சமாதானத்தாலும் ஒன்றும் பெற முடியுயாதென்றும் நம்பி வந்தார்கள். இறுதியாக, அவர்கள் முரட்டுத்தனமும் குழப்பமுடைய தெலுங்கு கன்னட இனத்தைச் சேர்ந்த சாகசக்காரர்கள் (இப்படி கால்டுவெல் கூறுவது ஏன்? - ந.ச.). அவர்களுடைய மூதாதையர்கள் நாட்டின் வடக்கு மேற்குப் பகுதிகளைப் பலமாக கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், யாருக்கும் கப்பம் செலுத்தவில்லை. அவர்களது அடக்கமற்ற ஆத்திரத்தினால் நேர்மையான பலம் வாய்ந்த அரசிற்கும் இடையூறு ஏற்பட்டது. இத்தகைய எல்லா வகுப்பு மக்களின் குழப்பமான விருப்புகளையும்