பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89 கால்டுவெல்


மதுரையிலும் திருநெல்வேலியிலும் உள்ள பாளையக்காரர் அனைவரும் இந்த முறையிலே நாயக்க அரசனால் நியமிக்கப்பட்டவர்களே. அந்த நாயக்க அரசன் அவ்வமிசத்தை நிறுவினவனாகக் கருதப்படும் விசுவநாதன் தானா அல்லது வேறு ஒருவனா என்பது பேரைய்யப்பாடாய்த் தோன்றுகிறது. நெல்சன் ஆதாரமாக நம்பின சாசனங்கள் சரித்திர சம்பந்தமற்றவை அல்லது குறைந்த வரலாற்றுத் தொடர்புடையவை என எனக்குத் தோன்றுகிறது. பாளையக்காரர்களின் தோற்றம் - நாயக்கர் ஆட்சிக்காலத்திலேதான் தோன்றியது என்பதை மட்டுந்தான் நாம் ஏற்றுக் கொள்ளமுடியுமென்று நான் எண்ணுகிறேன். மிகச் சில குறுநில மன்னர் (ஜமீந்தார்கள்) சிறப்பாக இராமநாதபுரம் சேதுபதி தவிர - தங்கள் நாடுகளும் தலைமைப் பதவியும் நாயக்கர்கள் காலத்திற்கு முந்தியவர்களாகிய பழைய பாண்டிய அரசர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என ஆணைவழிக் கூறலாம.

பாளையக்காரர்களின் நிலைமை

அருகிலுள்ள மாகாணங்களில் ஏற்பட்ட தெலுங்கர் குடியேற்றப் பகுதிகளின் தலைவர்களுக்கு அங்குள்ள பழைய மக்களைப் பயமுறுத்திப் பணியவைப்பதற்காக விசயநகர அரசனால் பாளையக்காரர் என்ற விருது வழங்கப்பட்டது என்று ஜெனரல் வில்க்ஸ் என்பார் கூறுகிறார். ஆனால், எந்த அரசன் பெயரையும் குறிப்பிடவில்லை. பாளையக்காரர் என்பதற்குப் ‘பாளையத்தை உடையவர்’ என்பது பொருள்; போர் அனுபவத்திற்காக மானியம் பெற்றவன் என்றும் மற்றொரு பொருளும் உண்டு. தமிழ்ப் பாளையக்காரர் என்ற பெயரே ‘போலிகார்’ என ஆங்கிலப் பெயரானதாகத் தெரியவில்லை. அது தெலுங்கிலுள்ள ‘பலேகாடு’ அல்லது கன்னடத்திலுள்ள ‘பலேகாரா’ என்று அதே பொருளில் வழங்கப்பட்ட சொற்களிலிருந்து பிறந்திருக்க வேண்டும். ‘காடு’, ‘கார’ என்ற சொற்கள் ‘காரர்’ என்ற சொல்லுக்கு ஏற்ற தெலுங்கு கன்னடச் சொற்களாகும். அதே போலப் 'பாளையத்தை உடையவன்' என்ற பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லாகிய ‘பொள்ளம்’ என்பது தமிழ்ச் சொல்லாகிய பாளையத்திலிருந்து வந்திருக்க முடியாது; தெலுங்குச் சொல்லாகிய ‘பாளமு’ என்பதிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது (இதன் ‘அடிச்சொல்’ - ந.ச.). விசயநகரப் பாளையக்காரன் முப்பத்து மூன்று கிராமங்களுக்குத் தலைவனாய் இருந்தான். ஆனால், தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கையில் எந்த அரசாட்சியும் இருந்ததாகக் காணப்படவில்லை. பாளையக்காரர்