பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 90


முதலில் கன்னட நாட்டில் ‘உடையவர்கள்’ என்ற பொருளைக் குறிக்கும் ‘உடையார்’ என்று வழங்கப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. இப்பெயர் தமிழ்நாட்டிலுள்ள ஜமீந்தர்களைக் குறிக்க அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில சமயங்களில் பழைய அரசர்களின் விருதுகளுடன் இப்பெயர் சேர்க்கப்பட்டிருப்பதைக் கல்வெட்டுகளிலும் நான் கண்டேன்.

மதுரையை ஆண்டவர்களால் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டதன் பலனை நோக்கும்போது கொடுமையும் பேராசையுமுடைய பாளையக்காரனால் நாடு முழுவதையும் ஆட்சி செய்வதென்பது - அதிலும் பொதுவாகப் பாளையக்காரர்கள் இருந்த நிலைக்கு அத்தகைய ஆட்சி பயனுடையதாயிருந்ததென்பது - சொல்ல இயலாது. பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் 1801 இல் இறுதியாகக் கீழ்ப்படியும்வரை இந்த நிலைமையே நீடித்திருந்தது. அவர்களுக்குள் சண்டையில்லாதபோது அவர்களிடமிருந்து மைய அரசுக்கான கப்பத்தைப் படைகளின் உதவியின்றிப் பெறவியலாது. இதனால் மானக்கேடும் மிகுந்த செலவும் ஏற்பட்டன.

(ஆறாம் இயலில் பாளையக்காரர்களின் பிற்கால நிலைமையைப் பற்றிக் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பைப் பார்க்க.)

மதுரை அரசர்கள் பாளையக்காரர்களை நியமித்ததன் பலனைப் பற்றி மேலே கூறப்பட்ட விவரத்திற்குப் பிறகு இம்முறையால் ஏற்பட்ட தீங்குகளைப் பற்றி விவரமாகத் தம் திருநெல்வேலி மானுவலில் ஸ்டூவர்ட்டு என்பவர் கூறுகிறார். ‘இடைக்காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்டிருந்த மானிய முறைக்கும் இந்தக் குறைபாடு செல்லுபடியாகும். இத்தகைய மானியங்களால் நாடு செழிப்புற்றிருந்த காலத்தில் நன்மை ஏற்பட்டது எனலாம். அடிக்கடி அடக்குமுறை அநீதியான ஆட்சி இடையிடையே கலந்திருந்தபோதிலும், அயலவர்களின் படையெடுப்பிலிருந்து நாட்டைக் காப்பாற்றுதல், உள்நாட்டு ஒழுங்கு முன்னேற்றம் இவை ஓரளவிற்கு நிலை நிறுத்தப்பட்டன. இன்றேல், அத்தகைய அமைதியை நிலை நிறுத்தியிருக்க இயலாது என்று அவர் கூறுகிறார். எந்தப் பாளையக்காரனைப் பற்றியும் ஒரு நல்ல வார்த்தைகூட இல்லை என்ற செய்தியை ஸ்டூவர்ட்டின் வாக்கிலிருந்து மகிழ்ச்சியுடன் (இரத்த உறவு கால்டுவெல்லையும் கைவிடல்லை! - ந.ச.). நான் எடுத்துக் கூறுகிறேன். அவர்களுடைய குறைபாடான செயல்களைப் பற்றி அவர் வினவவில்லை. அதற்கு இணையானதொரு வரலாற்று நிலையை எடுத்துக் கூறுகிறார். இடைக்காலத்தில் ஐரோப்பாவிலிருந்த மானியப் பிரபுக்களை விடப் பாளையக்காரர்களின்