பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தனர் என்பதும், அம்மக்கள் சித்திய இனத்தையோ, அன்றி ஆரியச் சார்பற்ற வேறோர் இனத்தையோ சேர்ந்தவர்கள் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளாகும். இப் பழங்குடிமக்கள் பேசிய திருந்தாத சித்திய மொழிச் சொற்கள், படையெடுத்துவந்து வெற்றிபெற்ற ஆரியர்கள் தம் சொல்வளமும், பொருண்மையும் நிறைந்த வடமொழி வெள்ளத்தில் ஆழ்ந்துபோய்விடுதல் இயல்பே. எனினும், அப் பழங்குடி மக்களின் மொழி ஒரேயடியாய் அழிந்தொழியாமல், தன்னை விழுங்கவந்த வடமொழி யையே உரங்கொண்டு தாக்கிக் கலக்கித் தன்னுடைய சொற்களிற் சிலவற்றைப் புகுத்திப் புதியதொரு மதுகையையும் நடைப் போக்கையும் அது மேற்கொள்ளச் செய்திருக்கவேண்டு மென்பது பின்வருங் காரணங்களால் ஊகிக்கப்படும்: (1) சித்திய மொழியின் இலக்கண அமைப்பு நிலையானதும், எதிர்ப்புக்கு ஈடுகொடுக்கும் ஆற்றலும் வாய்ந்தது. (2) ஆரியர்களை நோக்க அப் பழங்குடிகள் தொகையில் மிகுந்தவர்களா யிருந்தனர். (3) அதனால், அவர்களை ஆரியரால் அறவே அழித்தொழிக்க முடியவில்லை. (4) முதற்கண் அடிமைக ளாக்கப்பட்டு நாளாவட்டத்தில் ஆரியக் கூட்டத்தினருடனே சேர்க்கப்பட்டனர்.

இக் கொள்கை மற்றெக் கொள்கைகளையும் விட இன்றைய நிலைமையைத் தெளிவுபட விளக்குகிறது. வட இந்திய மொழிகளுள் சொல்தொகுதியில்மட்டுமே வட மொழிச் சார்பு மிகுதியாயிருப்பதும், இலக்கண அமைப்பு சித்திய மொழிச் சார்புடையதா யிருப்பதும் நோக்க, அம் மொழிகள் சித்தியப் பகுதியுடன் கலந்த ஆரிய அடிப்படை யுடையவை என்பதைவிட, ஆரியத்துடன் கலந்த சித்திய அடிப்படையை உடைய மொழிகள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமுடையதாகும். இம் மொழிகளுள் “தாத்தாரிய