பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

83

அல்லது சால்டிய” [1] (அதாவது சித்திய)க் கலப்பு உள்ளது என முதன்முதல் கூறியவர் சர். உவில்லியம் ஜோன்ஸ்[2] ஆவர். இதனை மறுப்பவருள் தலையானவர் ஹிந்தி மொழியைப் பற்றி, 1872 - ஏப்ரில் இண்டியன் ஆண்டிக்குவரி[3] என்ற வெளியீட்டில் கட்டுரை ஒன்றெழுதிய கிரெளஸ் பி. ஸி. எஸ்.[4] ஆவர். அவர் ஹிந்திமொழி ஒன்றை மட்டும் ஆராய்ந்துள்ளார்; அதிலும் இலக்கண அமைப்பை விட்டுச் சொல் தொகுதி ஒன்றை மட்டுமே ஆராய்ந்துள்ளார். ஆகையால் இன்னும் இத்துறையில் நுணுகி ஆராய்ந்து முடிபு காணும் வரையில், சித்திய அடிப்படை முடிபே நிலவி வரும்.

இனி, டாக்டர் ஸ்டீவென்ஸன் கொள்கையின் பின்னைய பகுதியை நோக்குவோம். வட இந்திய மொழிகளில் வட மொழி யல்லாத பிற மொழிக் கலப்பு இருக்கிறதென்பது ஒப்புக்கொள்ளப்படின், அப் பிறமொழி திராவிட மொழி யினத்தைச் சேர்ந்ததே என்பது அப் பகுதியாகும். இக் கொள்கை அவ்வளவு திட்டமாக ஆராய்ந்து நிறுவப்படுவ தொன்றன்று. இக் கொள்கைப்படி (1) இந்தியாவிலுள்ள மொழிகள் (வட இந்திய மொழிகளாயினுஞ் சரி, தென்னிந்திய மொழிகளாயினுஞ் சரி) எல்லாவற்றுள்ளும், சித்திய மொழிக் கலப்போ, திராவிட மொழிக் கலப்போ பெரும் பாலும் ஒரே படித்தானது. (2) ஆரியரால் முதலில் கைப்பற்றப் பெற்ற வட இந்தியக் கோட்டங்களுள் அக் கலப்பின் அளவு மிகவுங் குறுகியது. (3) சற்றுச் சேய்மையிலுள்ள தக்காணம், தெலிங்காணம், மைசூர் ஆகிய இடங்களில் அக் கலப்பின் அளவு சற்றுப் பெருகியது. (4) நில முக்கின் தென்கோடியில் இருப்பதும், மனுவின் காலத்திலும், இராமாயண காலத்திலும் பார்ப்பன ஆதிக்கம் கார்த்


  1. "Tuture an or Chaldee"
  2. Sir. W. Jones (Asiatic Researches Vol. |.)
  3. Indian Antiquary (April 1872).
  4. Mr. Growse B. C. S.