பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

திகைப் பிறைபோல் இருந்துவரப்பெற்றதுமாகிய தமிழ் நாட்டிலோ அது மிகப் பரந்து பெருகியிருந்தது.

முகற்கண், இம்முடிபு பண்டைய இந்திய வரலாற்றின் போக்கோடு ஒத்ததாகவே காணப்படும். எனினும், மொழி யாராய்ச்சிக் கண்ணாடிகொண்டு பார்க்கின் வட இந்தியப் பழங்குடி மக்களும், தென்னிந்தியப் பழங்குடி மக்களும் ஒரே இனத்தார் என்று சொல்லிவிடுவதற்கில்லை. வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பு சித்திய மொழிகளோடு ஒத்திருப்பதானாலும், திராவிட மொழிகளுடன் சிறப்பாக ஒத்திருப்பதாகக் காணப்படவில்லை. வட இந்திய மொழிகளுள் காணப் பெறும் வடமொழிச் சார்பற்ற பகுதி திராவிட மொழிகளோடு எவ்வளவு தொடர்புடையதாகக் காணப்படுகிறதோ, அவ்வளவிற்குக் கீழைத் துருக்கிய மொழிகளுடனோ, அன்றிச் சித்திய மொழிகளுடனோடு தொடர் புடையதாகவுங் காணப்படுகிறது. ஆதலால் மேற்கொள்கை எளிதில் ஒப்புக்கொள்ளக் கூடியதொன்றாக இல்லை.

வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பிற்கும், திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பிற்கும் உள்ள தலைமையான ஒப்புமைகள் கீழ்வருபவையாம்:–

(1) பெயர்ச்சொற்களின்பின் உருபுகள் சேர்ந்து வேற்றுமைகள் உண்டாதல். (2) பன்மைப் பெயர்களின் வேற்றுமை ஒருமையினின்றும் வேறுபடாமல் பன்மை விகுதியை முதலில் சேர்த்துப் பின் வேற்றுமை உருபுகளைச் சேர்ப்பதனால் உண்டாதல். (3) வட இந்திய மொழிகள் பலவற்றுள் திராவிட மொழிகளைப் போலவே தன்மைப் பன்மையில் முன்னிலையை உளப்படுத்தி ஒன்றும், விலக்கி ஒன்றுமாக இரண்டு வடிவங்கள் இருத்தல். (4) உருபுகளும், ஒட்டுக்களும் பெயருக்குமுன் வராமல் பின்வருதல். (5) வினைச் சொல்லின் காலத்தை இடைநிலை முதலிய உறுப்புகள்