பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

எதேனும் இருந்திருக்கக் கூடுமாயின், கை, கால், கண், காது (செவி) போன்ற முதன்மையான சில சொற்களேனும், அவற்றின் சிதைவுகளேனும் இவற்றுள் எம் மொழியிலாயினும் காணப்படாமலிருக்க இடமில்லை. உண்மையில் அத்தகைய எச் சொல்லும் இவற்றுள் யாண்டுங் காணப்பட வில்லை. பேராசிரியர் ஸ்டீவென்ஸன் கண்ட சில ஒப்புமைகள் அருவழக்காய் எங்கோ மூலையிலிருந் தெடுக்கப்பட்ட சொற்கள் ஆகும். வேறு முதற்சொற்களும், இலக்கண அமைதி ஒப்புமைகளும் இல்லாவிடத்து அச் சிறுபான்மையான ஒப்புமைகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆகவே, முதன்மையான வேர்ச் சொற்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழிகளுக்கும், வட இந்திய மொழி களுக்குமிடையே எத்துணை வேறுபாடு! ஆனால் திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் எத்துணை ஒற்றுமை! வியக்கத்தக்க இவ் வுண்மைகளைக் கீழ்வரும் அட்டவணையிற் காணலாம்: தன்மை முன்னிலை யொருமைப் பெயர், இடப் பெயர்களுள் எழுவாயில் ஒர் உருவும், பிற வேற்றுமைகளில் வேறு உருவும், வினைவிகுதிகளில் மற்றோருருவுமாக மாறி வருவதுடன், ஒரே இடத்திலும் உருக்கள் பண்டைக் காலத்தில் ஒருவகையாகவும், பிற்காலத்தில் வேறாகவும் இருக்கின்றமையால் வேண்டிய இடங்களில் அவை யாவும் ஒப்புமைக்காகத் தரப்படுகின்றன.

(பின்வரும் அட்டவனைகளில் எளிதில் ஒப்பிட்டறிதற்காக வடமொழி இடப்பெயர்களும், துருக்கிய இடப்பெயர்களும் பிறைக்குறிகளிட்டு முதலிற் கொடுக்கப்பெற்றுள்ளன.)