உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

லோருமே திராவிடர்களுடன் நெருங்கி உறவாடி இருக்க முடியுமா? முடியுமென்றால் எப்பொழுது? எப்படி? இன்றைய ஆராய்ச்சி நிலையில் இவ் வினாக்களுக்குத் திறம்பட விடையிறுப்பது அரிது. எனினும், அவற்றிற்கு எதாவது ஒரு வழி காணல் வேண்டும். கங்கைக் கரையினின்றும் ஆரியரால் தெற்கே விரட்டப்பட்ட மக்கள் கோலேரியரும், வடக்கே விரட்டப்பட்டவர் திபேத்துக் கலப்புமக்களும் ஆவர். எனவே, கோலேரியர் மொழிச் சான்றின்றி வட மொழிச் சொல் ஒன்று நேராகத் தமிழிலிருந்து பெறப்பட்டு விட்டது என்பதை ஒப்புக் கொள்ளுதல் சாலாது. இத்தகைய நிலைமையில் அச் சொல்லின் மூலத்தை ஆராயும் பகுதி உண்மையில் வடமொழியும், அதன் கிளைமொழிகளும் என்ற அளவுக்கே குறுகிவிடு மென்பதற்கையமில்லை. ஆழ்ந்து நோக்கினால் அதில் பெரும்பாலும் அதற்குரிய வேர்ச்சொல்லைக் காணலாம்.”

இக் கூற்று ஒருவாறு ஒப்புக்கொள்ளக் கூடியதேயாம். திராவிட மொழிகளைப் பற்றியவரை வட இந்திய மொழிகளில் அவற்றின் தாக்குதல் ஒருசிறிதுதான் இருந்திருக்கக் கூடும். ஆனால், சித்தியத் தாக்குதல்களாலோ அன்றி ஆரியச் சார்பற்ற பிற மொழிகளின் தாக்குதல்களாலோ, வட இந்திய மொழிகள் இன்றைய திரிந்த நிலையை அடைந்திருக்கக் கூடாவோ என்பது வேறு கேள்வி. திராவிடம், சித்தியம், ஆரியச் சார்பற்றவை என்பன ஒருபொருட் கிளவிகளல்ல. பீம்ஸ் என்பார் ’உயிர் ஒலிமாற்றங்கள்'[1] என்ற பிரிவில், ”ஆரிய உயிரொலிகள் இந்தியாவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் நடுவிலும் தெற்கிலும் உள்ள வெளி இனத்தாரால் எவ்வளவு மாறுதலடைந்தனவென்று சொல்லமுடியாது. ஆனால், மாறுதல் அடைந்துள்ளன என்பது மட்டும்


  1. Vowel Changes