பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எ. திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?



திராவிட மொழிகள் சித்திய மொழியினத்தோடு சேர்த்தற்குரியனவே யன்றி இந்து-ஐரோப்பிய மொழி யினத்தோடு சேர்த்தற்குரியனவாகா என்பது பேராசிரியர் ராஸ்க்[1] என்பாரின் முடிபாகும். சேர்த்தற்குரியன என்று மட்டும் கூறலாமே யன்றி, சேர்ந்தன என்று சொல்லிவிடு தற்கில்லை; அவை சித்திய மொழிகளோடு தொடர்புடையன வேயன்றிச் சித்திய மொழியினத்திலிருந்து பெறப்பட்டவை யல்ல. சித்திய மொழியினம் என்பதில் பின்னிஷ், துருக்கி, மங்கோலியம், துங்கூசஸியம் ஆகிய மொழியினங்கள் அடங்கும். ராஸ்க் என்பாரே இவ்வாறு முதன்முதல் வகைப்படுத்தினார். இம் மொழிகள் அனைத்தும் ஒரே இலக்கண அமைப்புடை யவையாய், ஒரேபடித்தான பொது விதிகளையும் பின்பற்றுகின்றன. உருபுகள் அல்லது துணைச் சொற்களைச் சேர்ப்பதனாலேயே அவை இலக்கண வேறுபா டுறுகின்றன; செமித்திய[2] மொழியினங்களிலோ பகுதியின் உயிரொலிகளை மாற்றுவதால் வேறுபா டுறுகின்றன; சீனத்திலும், பிற தனிப்பட்ட ஓரசை மொழிகளிலும் சொற்றோடரிலுள்ள சொற்களை முன்னும் பின்னும் மாற்றி யமைப்பதால் வேறுபாடுகின்றன. இவ்வகையில் இந்து-ஐரோப்பிய மொழிகளும் சித்திய மொழிகளைப் போலவே முதன்முதல், அடுக்கியல்[3] முறையையே கையாண்டிருந்தன என்று தோற்றுகின்றன. ஆனால் அவற்றின் அடைகள் அல்லது துணைச் சொற்கள் வரவரத் தேய்ந்து விகுதிகளாகவோ உருபுகளாகவோ மாறிவிட்டமையால் அவை சித்திய இனங்


  1. Professor Rask of Copenhagen
  2. Semitic
  3. Asglutinative