பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வேண்டும். உலக வரலாற்றின் பொதுப்படையான அமைதிகள்”என்ற தொகுதியில் மாக்ஸ்மூலரது துரனியமொழிகள் பற்றிய நமது இன்றைய அறிவுநிலை” என்ற ஆராய்ச்சியுரை பின்னர் வெளிவந்தது. அந்நூல்மிகச் சிறந்ததொன்று. எனினும், அந்நூலில் ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட பொருள் முழுவதையும், பொதுப்படவே ஆராய்ந்துள்ளார். அதனால் ஈண்டு எடுத்துக்கொண்ட பொருளுக்கு அது புதுச்சான்றுகள் ஒன்றையும் பகரவில்லை. திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளும், சொற்றொடர் முறையும் மேம்போக்காகப் பார்ப்பவர்க்குக் கூட விளங்கக் கூடுமாயினும், அவற்றின் ஒலிமுறை, அவற்றின் இடவகை மாற்றங்கள், வழக்குகள், இலக்கண உருமாற்றங்கள் முதலியவை தனிப்பட்ட ஆராய்ச்சியாலன்றி விளங்கத் தக்கவையல்ல.

இனி, இவ்வகை ஆராய்ச்சியைத் தொடங்குமுன் போட்லிங் என்பார் வரையறுத்துக் கூறிய, பின்வரும் கருத்து நினைவு கூரற்பாற்று : “ தாம் நன்கு ஆராய்ந்தறியாத மொழிகளைப்பற்றி ஒருவர் எழுத முற்படுதல் தீங்கு விளைப்பதாகும். சித்திய மொழியைப்பற்றி ஆராயவேண்டுமானால், அவற்றுள்ளடங்கிய பல்வேறு மொழிகளின் ஒப்பியல்களும் வேற்றுமையியல்களும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும். பாலர்’ என்பார் எழுதிய பின்னிய மொழியாராய்ச்சிக் கட்டுரைகளும், பேராசிரியர் ஹன்ஃபல்வி' என்பார் எழுதிய துரானிய மொழியாராய்ச்சிகளும் இத்துறையில் பேருதவி புரிய வல்லனவாம். ஹங்கேரியன், வோகுல்" ஒஸ்கியாக், பின்னிஷ் ஆகிய நான்கு மொழிகளும் ஒரே பொது மொழியினத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றின்

1. “On the present state of our knowledge of the Turanian Languages” by Max Muller in Bunsen's “Outlines of the Philosophy of Üniversal History. 2. Bohtlingh. 3. Bollar. 4. Prof. Hunfalvy.5. Vogul.