பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

97

இலக்கணங்களெல்லாம் நெருங்கிய தொடர்புடையன என்றும் ஹன்ஃபல்வி விளக்கியுள்ளார்.

பேரறிஞர் பாட், பிரடெரிக் முல்லர்[1] முதலிய பல மொழியியலார் சித்திய அல்லது துரானிய மொழிகள் ஒரு பொது மொழியிலிருந்து வந்தவை என்று உறுதியாகக் கூறமுடியாது என்று கருதுகின்றனர். பேரறிஞர் பிளாக்கும்[2] துரானிய மொழிகள் பலவும் ஒருபுடை ஒரே படித்தான வளர்ச்சியை அடைந்துள்ள ஒரே குழு மொழிகளோ அல்லது பல குழு மொழிகளோ ஆகும்” எனக் கருதுகின்றனர். எனினும் பொதுப்பட நோக்க, கஸ்த்ரேன்[3] முதலிய அறிஞர் கூறுகின்றபடி அவற்றின் ஒற்றுமைகள் மொழிக்கு இன்றியமையாதவையாகவும், பலவாகவும் இருக்கிறபடியால் அவற்றுள் ஏற்படும் தொடக்கப் பொதுமையை, அஃதாவது ஒரே முதன்மொழியினின்று அவை தொடங்கியிருக்க வேண்டும் என்ற முடிவை, ஏற்காதிருக்க முடியாது. இம்மொழிகளின் சொல் ஒற்றுமைகளும் வடிவ ஒற்றுமைகளும் ஆரிய செமிக்கிய இனங்களிற் காணப்படும் ஒற்றுமையினின்றும் வேறுபட்டவை யாயினும், தற்செயலாய் ஏற்படக் கூடியவை அல்ல, ஒரே முதன்மொழியிலிருந்து ஏற்பட்டவையாவே இருக்க வேண்டும் என்பது தெளிவு” என்பர் அறிஞர் மாக்ஸ்மூலரும், மேலும் நெடுநாள் பிரிந்தியங்கிய அடுக்கியல் மொழிகளுள், மொழியியற்கையின் அடிப்படைப் பகுதிகள் "அல்லது மாறுபாடு செய்யமுடியாத சொல் வகைகளான இடப்பெயர்கள், எண்ணுப் பெயர்கள், உருபுகள் போன்றவற்றைத் தவிர வேறு எத்தகைய ஒற்றுமைகளையும் நாம் எதிர்பார்க்க முடியாது. மேற்படையான பொருள் கொண்ட சொற்களுள் வேற்றுமை இருப்பதைவிட, ஒற்


  1. 1. Professor Pott and Friedrich Muller
  2. 2.Dr. Block
  3. 3. Castren