பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

99

யம், ஜப்பானியம் முதலிய மொழிகள் அனைத்தும் திராவிட மொழியைவிடச் "சிதைவியல்" துறையில் மேம்பட்டிருப்பினும், அக்காரணத்தால் சித்திய இனத்திலிருந்து விலக்கப்படவில்லை என்பதையும் ஒர்தல் வேண்டும்.

மொழியியலில் சீனத்தின் இடம்” என்ற நூலில் எட்கின்ஸ் சிக்கிய இனத்தின் ஒருமை, அவற்றுடன் திராவிட மொழிகளின் தொடர்பு ஆகிய கொள்கைகளைப் பெரிதும் ஏற்றுக் கொள்ளுகின்றார். அவர் காட்டும் பல தற்செயலான, நுணுக்கமான ஒற்றுமைகள் ஆழ்ந்து ஆராயுமளவில் நிலைநிற்கா. ஆயினும் பொதுப்படக் கூறுமளவில் இத்துறையில் ஒருவர் ஆராயுந்தோறும் திராவிட மொழிகள் மங்கோலிய மொழிகள் ஆகிய இரண்டும் ஒருவாறு ஒருமைப்பாடுடையன என்பதைக் காண்பர். திராவிட சீன மொழிகளிடை ஒற்றுமைகள் மிகுதி எனக் கூற முடியாது. எட்கின்ஸ் சித்திய இனம்மட்டுமன்று, ஆசிய ஐரோப்பிய மொழிகள் அனைத்துமே ஒரே முதன்மொழியின் வகைத் திரிபுகள் ஆகும் ” என்கிறார். இதுவரை மனித வகுப்பின் மொழிகளை அறிஞர் ஆராய்ந்த அளவில் இக்கோட்பாடு பொருத்தமாகத் தோன்றினும் அறிவியல் முறைப்படி இது முற்றிலும் நிலைநாட்டப்பட இன்னும் நெடுநாள் செல்லக் கூடும். கடைசியாக, திராவிட மொழிகளின் அமைப்புகளை விளக்கச் சித்திய மொழியினத்தை ஒற்றுமைப்படுத்தி ஆராய்ந்த அறிவு எவ்வளவோ பயன்படுகிறது என்ற ஒரு செய்தியே அவற்றுள் சித்தியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கோர் அறிகுறியாகும். இதற்கு எடுத்துக் காட்டாகத் திராவிட மொழியிலுள்ள வினைச்சொற்களின் பெயரெச்சத்தின் அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். மங்கோலியம், மஞ்சு இவற்றில் இஃது எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை அறிந்தபின்னரே, திராவிட மொழிகளில் எங்ஙனம்