பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

அமைந்துள்ளது என்பதை எளிதில் அறியமுடிந்தது. அங்ஙனம் அறிந்த விளக்கத்தை இதுவரை யாரும் மறுக்கவோ அல்லது வேறு வகையில் விளக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திய இனச்சார்புக் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு சான்றுங் கிடைத்துள்ளது. அதுவே மேற்கு மீடியா அல்லது பாரஸீகத்தில் உள்ள பெஹிஸ்தன் அல்லது பகிஸ்தான் அட்டவணைகளின் மொழிபெயர்ப்புக்கள் ஆகும். இவ் அட்டவணைகள் டரயஸ் ஹிஸ்டாஸ்பஸ்" என்பவர் தம்மைப்பற்றிக் தாமே எழுதிய வரலாறு ஆகும். இவை பழம் பாரசீக மொழியிலும், பாபிலோனிய மொழியிலும், பாரஸீக, மீடியப் பேரரசிலுள்ள சித்திய மக்களும் அறியும் படியாக அவர்களது தாய்மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொழிபெயர்ப்பு திராவிட சித்திய உறவை விளக்கும் வகையில் ஒரு புத்தொளியாய் விளங்குகின்றது. இவற்றின் இரண்டாம் தொகுதி தெளிவாகச் சித்தியச் சார்பானது என்று நாரிஸ்’ தமது கட்டுரையில் எழுதுகிறார். பேரறிஞர் ஆல்பர்ட் இம்மொழியைப் பேசிய மக்கள் மீடியரே என்று கூறுகிறார். ஆயினும் அவரும் இம்மொழி சித்திய அல்லது துரானியச் சார்பானதென்றே கொள்கிறார். இதனால், கி. மு.5-ம் நூற்றாண்டிலேயே பேசப்பட்ட ஒரு சிக்கிய இன மொழியுடன் திராவிட மொழிகளை ஒற்றுமைப்படுத்தும் ஒர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இம்மொழி பொதுப்படச் சித்திய இனச்சார்புடையதே. எனினும், அவற்றுட் சிறப்பாக உக்ரோபின்னிஷ் குழுவுடன் இன்னும் நெருங்கிய தொடர்புடையதாகவுங் காட்டப்படுகிறது. திராவிடமொழி

1. Western Media. 2. Darius Hystaspes, 3. Mr. Norris. 4. Journal of the Royal Asiatic Society Vol. XV. 5. Prof. Oppert.