பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

றுமைகளும் காணக் கிடக்கின்றனவாதலின். இவ்வொற்றுமைகளிலிருந்து பெறப்படுவனயாவை யெனில், திராவிடர் வரலாற்றுக் காலங்களுக்கு நெடுநாள் முன்னரே இந்நாட்டிலேயே இருந்தவர்கள் என்பதும், அவர்களும் உலக மக்கட் குழுவினர் அனைவருக்கும் முதற் பிறப்பிடமாகக் கருதப்படும் நடு ஆசியாவினின்றே இங்கு வந்தவர்கள் என்பதுமே யாம். முதலில் ஆரியரிடமிருந்தும், பின் உக்ரோ-துரானியரிடமிருந்தும் பிரிந்து இவர்கள் இங்கியாவை நோக்கி வந்திருக்கவேண்டும் என்பதும், வரும் வழியில் பலூச்சிஸ்தானக்கில் ஒரு பகுதியினரைக் குடியேறவிட்டு வங்திருக்க வேண்டும் என்பதும் எளிதில் ஊகிக்கப்படும்.

இங்ஙனம் இலக்கண அமைப்பு முதலிய பல ஒற்றுமைப் பண்புகளின் மூலம் திராவிட மொழிகள் சித்தியக் சார்புடையவை என்று கொள்ளப்படினும், அவை இந்து - ஐரோப்பிய மொழியினச் சார்பும் உடையவையே என்பது வியக்கத்தக்க சில ஒப்புமைகளால் உய்த்துணரப்படும். அவற்றின் சித்தியத் தொடர்புகூடத் தனிப்படத் துருக்கியக் குழுவுடனே, உக்ரிய, மங்கோலிய, துங்கூஸிய மொழிகளுடனே அன்று ; அம்மொழிகள் அனைத்தும் தம்முள் எவ்வளவோ வேற்றுமையுடையன ; ஆயினும் அவையனைத்திற்கும், தாயாயுள்ள ஒரு பேரின மொழியுடனேயே திராவிட மொழியினங்கள் தொடர்புடையவை யாம். இவற்றுள் திராவிடத்திற்கு மிகவும் அண்மையுடையதெனக் கொள்ளக்கூடியது பின்னிஷ் அல்லது உக்ரியமே. ஒஸ்கியக்குடனும் சில சிறப்பான உறவுகள் உள்ளன. இலக்கண ஒப்புமை,சொல் தொகுதி ஒப்புமை ஆகியவற்றின் மூலமாகமட்டும் ஆராய்ந்து கண்ட இம்முடிபு பெஹிஸ்தன் அட்டவணைகளின் வெளியிட்டால் பெரிதும் உறுதியடைவது காண்க. இதனால் மீடோ-பாரசீகரது படையெடுப்பிற்கு