பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

105


முன் நடு ஆசியாவில் குடியிருந்த மக்கள் துருக்கிய அல்லது மங்கோலியக் குழுவினர் அல்லர், உக்ரியக் குழுவினரே என்பது விளங்கும். வெப்ப மண்டலத்துள் இருக்கும் ரொவிடக் குழு எங்கே, வட துருவப் பக்கத்திலிருக்கும் பின்னியர், ஒஸ்கியக்கர், உக்ரியர் எங்கே! இவர்களிடையே எத்தைகைய தொடர்பு?

கிராவிட மொழிகளைச் சித்தியச் சார்புடையவை என்று கணித்தற்கான தெளிவுகளை ஆராய்கையில் நினைவில் வைக்க வேண்டியதொன்றுண்டு. அஃதாவது, ஒருபுறம் சித்திய இன மொழிகளின் அடிப்படையான தொடக்க இயல்’ பண்புகள் தெளிவானவுருவுடையவை ஆக இருப்பினும், இன்னொருபுறம் சொல் தொகுதியிலும், வேறு பல சிறு குறிப்புக்களிலும் ஒன்றுக்கொன்று மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை உடையவையாயிருக்கின்றன என்பதே. உண்மையில், இந்து - ஐரோப்பிய இன மொழிகள் ஒன்றுக்கு ஒன்று வேற்றுமைப்படுவதைவிட, சித்திய மொழிகள் ஒன்றுக்கொன்று எத்தனையோ மடங்கு மிகுந்த வேற்றுமையுடையன என்று கூறுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்து - ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் எண்களின் பெயர்கள் ஒத்திருக்கின்றன என்று சொன்னாற் போதாது, (வடமொழி ஒன்று என்னும் பொருள்கொண்ட எக என்பது நீங்கலாக மற்றவை அனைத்தும்) ஒரே வடிவுடையவையாகவே இருக்கின்றன என்றுங் கூறுதல் வேண்டும். இதற்கு நேர்மாறாக, சித்திய இன மொழிகளில் அனைத்திற்கும் பொதுவான ஒற்றுமைகள் அருகியிருக்கின்றன என்று சொன்னும் போதாது; ஏதேனும் இரண்டு மொழிகளுக்குப் பொதுவான எண்களின் பெயர்கள்கூட மிக மாறுபட்டே யிருக்கின்றன என்றுங் கூறுதல் வேண்டும். இவ்வேற்றுமைகளின் மிகுதிப்பாட்டை நோக்கின்,