பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே மேற்குறிப்பிட்ட கிராவிட-இந்து-ஐரோப்பிய ஒற்றுமைகள் ஒப்புக் கொள்ளப்பெற்றுள்ளன. அதற்காகக் குறித்துள்ள எடுத்துக் காட்டுகளில் சில ஒற்றுமைகள் அடிப்படையானவை அல்ல; ஆதலால் ஆழ்ந்த நோக்கும் அளவில் மறைந்துவிடுகின்றன. (தமிழ் ஒன்று அல்லது ஒண்ணு; இலத்தினம் ஊனுஸ்; தமிழ் அஞ்சு ; வடமொழி பஞ்ச(ன்) ; தமிழ் எட்டு ; வடமொழி அஷ்ட(ன்) என்பன போல்பவை). இவற்றைப் புறக்கணித்து விட்டுப் பார்த்தாலுங்கூடத் திராவிட மொழிகளின் இலக்கண அமைகிகளிற் பலவும், முதற் சொற்களிற் பலவும் இந்து-ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்புமையுடையவையாய் இருக்கின்றன. ஆயினும், உயிர்நிலையான அமைப்பு முழுவதும் ஐயமறச் சிக்கியச் சார்புடையதாதலால் சித்திய இன உறவே வலியுறுத்தப்பட்டது. எபிரேய முதற் சொற்களிற் பல வடமொழி முதற்சொற்களுடன் தொடர்புடையவை என்று காட்டப்படுகின்றமை கருகி, எபிரேய மொழியைச் செமித்கிய இனத்தினின்றும் பிரித்து இந்து - ஐரோப்பிய மொழியாகக் கணிக்காததுபோல, வடமொழி, கிரேக்கம், காகிக், கெல்த்திக், பாரஸீகம் முதலிய பல மொழிகளுடன் வியக்கத் தகும் ஒற்றுமைகள் கிராவிட மொழிகளிற் காணப்படினும் கிராவிட மொழிகளைச் சித்திய இனத்திலிருந்தும் பிரிக்க வேண்டியதில்லை. "கினிகோ. ஆர்யக" என்ற நூலில்[1] பேரறிஞர் ஷ்லெஜெல் ஆரிய சீன ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டி ஆரிய சீன மொழிகள் தம்முள் இன உறவுடையன என்று விளக்க முயல்கிறார். அவர் கூறிய உறவு உறுதிப்பட்டுவிடினுங்கூடச் சீனம் ஆரியமொழி என்று ஆய்விடமாட்டாது. இரு மொழிகளிலும் மிகப் பழமையான சில முதற் சொற்கள் உள்ளன என்றுதான் முடிவு


  1. Dr. Gustar Schlegel in “ Sinico-Aryaca ” (Batavia 1872