பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

111

செய்யப்படும். மேலும் சீனமொழி மட்டுமே யன்றி, வடமொழியும், எபிரேயமுங்கூட முதன்முதலில் ஒரசை மொழியாய் இருந்தன என்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது. பெரும்பாலும் திராவிட முதற்சொற்களும் அங்ஙனம் ஓரசைச் சொற்களே என்பது இவ்வாராய்ச்சியால் புலனாகும். இவ்வகையில் பேரறிஞர் ப்ளிக் என்பார் ஆரிய மொழிகள் மிகப் பழைமையானதொரு காலத்தில், திராவிட மொழி அளின் காக்குதல்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும்” எனக் கொள்கிறார். அவர் கூறுவதாவது : -"பால் வகுப்புடைய மொழிகளுள் ஆரிய இனம் பொதுப்பால் என ஒரு பால் உடைமையால் வேறு பிரிக்கப்படுகிறது. இன்றைய ஆரிய மொழிகளுள் இப்பொதுப்பால் திருந்திய முறையில் வழங்குவது ஆங்கிலம் ஒன்றிலேதான். ஆனால், பழைய மொழிகளுள் ஆங்கிலத்திற்கு ஒப்பத் திருத்தமாக இதனைத் திராவிட மொழிக் குழுவே வழங்கிவந்துள்ளது. ஆங்கிலமும் திராவிட மொழிகளும் இப்பாலை வழங்கும் இடங்கள், எல்லை ஆகியவற்றுள் முற்றிலும் ஒத்திருக்கின்றன. (ஆண், பெண், பொது என்ற) முப்பால் பாகுபட்டை உடைய குழுக்கள் இவை இரண்டுமே என்பதை நோக்க இவை உறவற்றவை என்று கொள்ளுதல் இயல்பாகத் தோற்றவில்லை. பால் வகுப்பையுடைய ஆரிய இனத்துடன் திராவிட மொழிகள் இதுகாறும் தொடர்புபடுத்தப்படவில்லையாயினும், ஆரிய மொழிகள் உரு அடையாமல் வளர்ந்துவந்த காலத்தில் அவற்றில் திராவிடத்தாக்கு ஏற்பட்டதனாலேயே இவ்வொற்றுமையும் பிற ஒற்றுமைகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று கூற இடமுண்டு” என்பதே. ஆராய்ச்சி எட்டுமளவும் பார்த்தாலும் மிகப் பழமையான காலத்தில்கூடத் திராவிட மொழிகளில் இப்பொதுப்பால் ஒருமைப் (ஒன்


1. Dr.Bleek