பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

115

கூறப்படும் எல்லா மொழிகளுக்கும் தாயகமான முதற் சித்திய மொழியினத்துடன் ஒன்றுபட்டிருந்த காலத்திற்கு முக்கியும் கொண்டுசெல்லுங் தகையவாயிருக்கின்றன.

திராவிட மொழிகளில், சிறப்பாகத் தமிழில், ஒருசில செமித்திய ஒற்றுமைகள் காணப்படுகின்றமை வியக்கத்தக்கதே. அவற்றுள்ளும் சில ஒற்றுமைகள் இவ்விரண்டில் மட்டுமன்றி, எபிரேயத்திலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் இருக்கின்றன. இத்தகைய இடங்களில் எபிரேய உருவே இந்து-ஐரோப்பிய உருவினும் திராவிட மொழிகளுக்கு அண்மையதா யிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழில் அவா (பெயர்ச்சொல்); ஆவல் (தொழிற் பெயர்); இவற்றை இலத்தீனம் அவெ-ஒ (வினைப்பகுதி), வடமொழி அவ் முதலியவை அண்டியே இருக்கின்றன. ஆயினும், எபிரேயம் அவ்வாஹ் (பெயர்ச்சொல்), ஆவஹ் (வினை) என்ற இரண்டும் மிகவும் அண்மையுடையவாயிருக்கின்றமை காண்க! இங்ஙனம் திராவிடம் உள்ளடங்கிய எல்லா இனங்களுக்கும் பொதுவான ஒற்றுமைகள் ஒருபுறம் இருக்க, திராவிடம், எபிரேயம் இவற்றிற்கே சிறப்பாய், பிற மொழிகள் எவற்றிற்கும் உரியவல்லாத ஒப்புமைப் பண்புகளும் சில இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட தமிழிலுள்ள செமித்திய ஒற்றுமைகள் இந்து-ஐரோப்பிய ஒற்றுமைகளைப் போலச் சிறந்தவையுமல்ல, பலவுமல்ல; ஆனால், இம் மூன்றினங்களிலுங் காணப்பெறும் ஒற்றுமைகளுடனும், எபிரேயத்துடன் மிகவும் நெருங்கியவாய்க் காணப்பெறும் பண்புகளுடனும் சேர்ந்து, அவை திராவிட மொழியின் பண்டைத் தொன்மையைப் பற்றி ஆராயும் அறிஞருக்கு மிகவும் பயன்தரத்தக்கவை. இத்தகைய ஒப்புமைகளை இங்கே குறிப்பது திராவிடத்திற்கும் எபிரேயத்திற்கும் இவற்றிற்கும் தொடர்பு