பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

உண்டென்று காட்டவன்று; பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்” என்ற உண்மையைக் கருத்திற் கொண்டு இத்துறைகளில் எல்லாம் ஆராய்ச்சியைச் செலுத்தாவிடினும், பிறரது ஆராய்ச்சிக்காக இத்தகைய முடிவுபடுத்தப்படாக சிதறிய ஒப்புமைகளை அப்படியே எடுத்துக் காட்டவேயாம். ஆனால், இந்து-ஐரோப்பிய-திராவிட ஒப்புமைகள் மொழியியலின் உயிர்நிலையை ஒட்டியவையாதலின் அவற்றைப் பழைமையான கூட்டுறவில்லை பெறப்பட்டவை என்று கூறிவிட முடியாது. செமித்திய ஒற்றுமைகளோ இங்ஙனமன்றி இன ஒற்றுமையை இன்றியன்மயாதவையாக வேண்டக்கூடியவையல்ல ; தற்செயலாய் ஏற்பட்டவை என்றே, அல்லது ஏதேனும் ஒருகாலத்தில் பண்டைத் திராவிடர்கள் செமித்திய இனத்தாருடன் அடுத்து வாழ்ந்தமையால் ஏற்பட்டவை (இது எளிதில் இருந்திருக்கக் கூடியதே) என்றே கூறிவிடலாம்.

இனி, திராவிட மொழிகளின் இடப்பெயர்கள் தெற்கு, மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடிகளின் மொழியிற் காணப்பெறும் இடப்பெயர்களை வியக்கத்தக்க முறையில் ஒத்திருக்கின்றன. இவ்வொப்புமைக்குக் காரணங்கள் பல கூறலாமாயினும், ஒப்புமை இருக்கின்றதென்பதை மட்டிலும் மறுத்தற்கில்லை. ஆனால், ஆஸ்திரேலியத் தன்மை இடப் பெயர், திராவிட மொழித்தன்மை இடப்பெயரைவிட, திபேத்திய மொழித்தன்மைப் பெயரை மிகுதியும் ஒத்துள்ளது என்பது இதுகாறுங் கவனிக்கப்படவில்லை. கீழ்வரும் ஒப்புமைப் பட்டியை நோக்குக!

இதில் ஆஸ்திரேலியத் தன்மைப் பெயரின் பகுதி திபேத்திய மொழியையும் இந்து-சீன இனத்தையும் பெரிதும் ஒத்திருப்பினும், பன்மையாகும் பொழுது அது திராவிட மொழிகளை, அதிலும் சிறப்பாகத் தெலுங்குமொழியை,