பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தருவது. இஃது ஈரெண்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. ஒருமையில் ஒருமை விகுதியாக னகரமும் (ன்), பன்மையில் பன்மை விகுதியாக மகரமும் (ம்) வருகின்றன. சில இடங்களில் பன்மை விகுதியாகிய மகரத்திற்கு மாறாகப் படர்க்கைப் பன்மையின் விகுதியாகிய ரகரம் வந்து நீர் (தெலுங்கு மீரு ; அதாவது மீர்+உ) ஆகலும் உண்டு. ஆனால், புதிதாக வந்த இந்த ரகர விகுதி,எழுவாயில், அதிலும் தனியான சொல்லில் மட்டுமே வருகிறது. பிற விகுதிகள் உருபுகள் சேர்ந்த பகுபதங்களுள் வரும்பொழுது மகர விகுதியே வருதல் காண்க (எ-டு): நாங்கள் = நாம் + கள்; நீங்கள் = நீம்+கள்; உங்கள் உம்முடைய முதலாயின. ஒருமையில் முன்னிலைப் பெயரிலுள்ள உயிரொலி இகரமேயாயினும், பன்மையில் இகரத்தினிடமாக உகரமும் வருகிறது. (எ-டு): பிராகுவி : நும் = நீங்கள் ; செந்தமிழ்: நும்(உங்களுடைய). இக்காலக் கன்னடம் இந் "நீம்" என்பதன் மகரத்தை வகரமாக மெலிவித்து, "நீஉ அல்லது நீவு" ஆக்குகின்றது காண்க : இம்மாற்றங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வாறு ஆஸ்திரேலிய மொழியியல்பு திராவிட மொழியியல்பை முற்றிலும் ஒத்திருப்பது விளக்க முடியாததொரு புதுமையேயாம்.

கீழ்வரும் ஒப்புமைப்பட்டியில் இருமை, பன்மை ஆகிய ஈரெண்களும் (இரண்டின் பொருளும் திராவிட மொழிகளில் ஒன்றேயாதலால்) பன்மை என்றே குறிக்கப்படுகின்றன.


தமிழ் தன்மை ஒருமை இரண்டாம் வேற்றுமை உரு 'என்னை' என்பதையும் ஆஸ்திரேலிய இரண்டாம் வேற்றுமை உரு 'என்மொ' என்பதையும் ஒப்புநோக்குக!

ஆஸ்திரேலிய மொழிகளின் மொழியமைப்பு சித்திய இனத்துடன் பெரும்பாலும் ஒற்றுமையுடையதாகவே


l.Nivu, 2.Niwu