பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

119


திராவிடம் ஆஸ்திரேலியம்

முன்னிலை ஒருமை நின்ன, ஙின்னெ, நீம்,நிம் ஙிந்தொஅ,நிங்தெ.

முன்னிலைப் பன்மை நீர், நும், நிமெதூ, நுர,நிவ,ஙுர்லெ

காணப்படுகிறது: முன்னடைகளின் இடமாகப் பின்னடைகளை வழங்குதல்; தன்மைப் பன்மையில் ஒன்று முன்னிலை நீங்கலாகவும் ஒன்று அதனை உளப்படுத்தியும் இரண்டு வடிவங்கள் உடைமை; தன்வினை, பிறவினை முதலியவற்றை விகுதி சேர்ப்பதாலேயே தெரிவித்தல்; சொற்களின் அடுக்கியல் அமைப்பு, வாக்கியத்திலுள்ள சொற்றொடர்பு முறை ஆகிய இவையனைத்திலும் இவை திராவிட மொழிகளையும், துருக்கியம், மங்கோலியம் போன்ற பிற சித்திய மொழிகளையும் ஒத்தே இருக்கின்றன. ஆனால், ஒன்றிரண்டு இடங்கள் நீங்கலாக, பாலினேஸிய மொழிகளுடன் இவை வேறுபடுகின்றன. ஆஸ்திரேலிய மொழிகளில் திரட்டப்பட்ட சொற்றொகுதிகளில் இவ்வொற்றுமைகளை உறுதிப்படுத்தும் வேறுவிவரங்கள் இல்லையாயினும், இவ்வொற்றுமைகள் தற்செயலானவையென்று விடத்தக்கவையல்ல.

நடு ஆப்பிரிக்காவில் போர்னு நாட்டில் பேசப்படும் கனுாரி அல்லது போர்னு என்னும் மொழிக்கும் திராவிட மொழிக்கும் தொடர்பிருப்பது மேற்கூறிய ஒப்புமையினும் புதுமையானதேயாம். இவ்வொப்புமைகள் பொதுப்படையானவை என்பது உண்மையே. அவையாவன :—கனுாரி


1.Polynesian, 2.Bornu, 3.Kanuri